/* */

தேனி மாவட்டத்தில் கட்டுக்குள் வந்தது கொரோனா: கேரளாவிலிருந்து ஜிகா வருது உஷார்-மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

கேரளாவில் இருந்து ஜிகா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் தேனி மாவட்ட மக்கள் உஷாராக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் கட்டுக்குள் வந்தது கொரோனா:   கேரளாவிலிருந்து ஜிகா வருது உஷார்-மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
X

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இன்றைய (நேற்று மாலை) நிலவரப்படி மாவட்டத்தில் முப்பது பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணுாற்றி ஐம்பதை கடந்தது. உயிரிழப்பும் மிகவும் அதிகளவில் இருந்தது. மக்கள் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் பரிதவித்தனர்.

ஒட்டுமொத்தமாக மாவட்டத்தை உலுக்கி எடுத்த கொரோனா நோய் தொற்று பாதிப்பு கடந்த 20 நாட்களாக மெல்ல, மெல்ல குறைந்தது. இன்றைய (நேற்று மாலை) நிலவரப்படி தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வெளியிட்டுள்ள குறிப்பில் மாவட்டம் முழுவதும் நடந்த பரிசோதனையில் முப்பது பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இரண்டாவது அலை தேனி மாவட்டத்தில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தாலும், எல்லையோரம் உள்ள கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருவதால், தேனி மாவட்ட மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.


Updated On: 10 July 2021 4:06 AM GMT

Related News