பெரியகுளத்தில் 90.4 மி.மீ., மழை; நிரம்பி வழியும் சோத்துப்பாறை!
126 அடி உயரம் கொண்ட பெரியகுளம் சோத்துப்பாறை அணை நிரம்பி வழிகிறது.
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழை சில நாட்களாக குறைந்திருந்தது. ஐந்து நாட்களுக்கும் மேலாக வெயில் ஓரவுக்கு இருந்து வந்தது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்தது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழையளவு பற்றி பார்க்கலாம். ஆண்டிபட்டி 15.2 மி.மீ., அரண்மனைப்புதுார் 3 மி.மீ., வீரபாண்டி 1.4 மி.மீ., பெரியகுளம் 90.4 மி.மீ., மஞ்சளாறில் 49 மி.மீ., சோத்துப்பாறையில் 50.2 மி.மீ., வைகை அணையில் 11 மி.மீ., போடிநாயக்கனுாரில் 3.6 மி.மீ., உத்தமபாளையத்தில் 3.2 மி.மீ., கூடலுாரில் 2 மி.மீ., பெரியாறு அணையில் 4.4 மி.மீ., தேக்கடியில் 4 மி.மீ., சண்முகாநதியில் 12.4 மி.மீ., மழை பெய்தது.
இந்த மழையால், சோத்துப்பாறை அணை தனது முழு கொள்ளவான 126.28 அடி நிறைந்து மறுகால் பாய்கிறது. வைகை அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 69 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 47.64 அடியாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 119.10 அடியை கடந்தது. அணைக்கு விநாடிக்கு 205 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 404 ஏக்கர் பரப்பில் முதல் போக நெல் சாகுபடி செய்யவும், தேனி மாவட்ட குடிநீருக்காகவும் இந்த அணை திறக்கப்பட்டுள்ளது.
மஞ்சளாறு அணை, சண்முகாநதி அணைகளுக்கும் நீர் வரத்து இருந்து வருகிறது. கொட்டகுடி ஆறு, வராகநதிகளில் எந்த நேரமும் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu