ஈரோடு கிழக்கு பிரச்சாரத்திற்கு போகாத ஸ்டாலின்?..காரணம் என்ன?

ஈரோடு கிழக்கு பிரச்சாரத்திற்கு போகாத ஸ்டாலின்?..காரணம் என்ன?
X
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி திமுகவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்து விட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தைரியமாக எதிர்த்து நிற்கிறது.

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி திமுகவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்து விட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தைரியமாக எதிர்த்து நிற்கிறது.

இடைத்தேர்தல் தேதிகள்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. . பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனுதாக்கல் தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாகும்.

காலியான ஈரோடு கிழக்கு தொகுதி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்

பொங்கல் அன்றுதான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்படி நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுகிறார். சீதாலட்சுமி, ஆசிரியராகப் பணியாற்றியவர். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 1 கோடி.


திமுக தரப்பின் கருத்து

இந்த சூழலில், நாம் தமிழர் கட்சி, நமக்கு போட்டியா? என்று கெளரவக் குறைச்சலாக திமுக தலைமை கருதுகிறதாம். இதனால் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் போகத் தேவையில்லை என்று மூத்த அமைச்சர்களும் எம்.பி.க்களும் ஸ்டாலினிடம் சொல்லி வருகிறார்களாம். அனேகமாக பிரச்சாரத்துக்கு இவர்கள் இருவரும் செல்ல மாட்டார்கள் என்றே அறிவாலயத் தரப்பில் சொல்லப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாடு

அதற்கு முன்னோட்டமாக, முதல்வர் ஸ்டாலினை தொடர்புகொண்ட அமைச்சர் முத்துச்சாமி, பிரச்சாரத்துக்கு வருவது பற்றி கேட்டிருக்கிறார். நீங்களே பார்த்துக்கலாமே ! நான் வரணுமா என்ன? என்று ஸ்டாலின் கேட்டிருப்பதால் பிரச்சாரத்துக்கு செல்ல ஸ்டாலின் விரும்பவில்லை என்று தெரிகிறது.

மாவட்ட அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட பணி

அதேசமயம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒதுக்கப்பட்ட தேர்தல் பணி விபரங்களை தற்சமயம் நிறுத்தப்பட்டு, மாவட்ட அமைச்சர் முத்துச்சாமி மட்டுமே கவனித்திக் கொள்ளட்டும் என்று தலைமை உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

திமுகவின் பல்ஸ் ஆய்வு

இதற்கிடையே தொகுதியின் பல்ஸை ஆராய்ந்துள்ளது திமுக. அதாவது, எதிர்க்கட்சிகளின் வாக்குகளும், ஆளும் கட்சிக்கு எதிரான அதிர்ப்தி வாக்குகளும் சீமான் கட்சிக்கு இடமாறுகிறதா? அந்த வாக்குகளின் நிலை என்ன ? என்பது குறித்து பல்ஸ் பார்த்துள்ளனர்.

பல்ஸ் ஆய்வின் முடிவு

அதில், சீமானின் பிரச்சாரம் தொகுதியில் எதிரொலித்தால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு அதிகம் விழ வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் திமுகவின் வெற்றி வித்தியாசம் குறைவதற்கும் வாய்ப்பு அதிகம். ஆக, சீமானின் பிரச்சாரம் இல்லாமல் இருப்பது நல்லது என்று அந்த பல்ஸ் கூறுகிறதாம்.

சீமான் கைது குறித்த ஆலோசனை

சீமானின் பிரச்சாரம் இல்லாமல் இருக்க வேண்டுமானாக் சீமான் கைது செய்யப்பட வேண்டும். செய்யலாமா? என்று ஒரு திடீர் ஆலோசனை கிச்சன் கேபினெட்டில் நடந்துள்ளது.

உளவுத்துறையின் அறிவுரை

ஆனால், உளவுத்துறையும் அதிகாரிகள் தரப்பும், "சீமான் கைது செய்யப்பட்டால் அவரது இமேஜ் உயரும். தேர்தல் களத்தில் அவரை நடமாடவிட்டும், பிரச்சாரம் செய்ய அனுமதித்தும் அவரது கட்சியை மிக மிக குறைந்த வாக்குகளில் டெபாஸிட் இழக்க வைப்பது தான் ஆளும் கட்சியின் மக்கள் செல்வாக்கை உயர்த்தும்" என்று முதல்வர் ஸ்டாலினுக்கு சொல்லியிருக்கிறது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!