ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற சீமான் கோரிக்கை

ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற சீமான் கோரிக்கை

சீமான்.

ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏரி, குளம், சாலையோரங்களில் ஆக்கிரமித்து வீடு கட்ட இருப்பவர்களை தயவு தாட்சண்யம் இன்றி அப்புறப்படுத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவின்படி சில மாவட்ட ஆட்சியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சாலையோரம் மற்றும் ஏரி குளம் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகள் ஐகோர்ட் உத்தரவின் படி இடித்து அகற்றப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார்.

அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆறு, குளம், ஏரி மற்றும் சாலை ஓரம் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு செய்து குடிசைகள் அல்லது வீடு கட்டி இருப்பவர்களுக்கு அரசு சார்பில் தான் மின்சாரம், குடிநீர் இணைப்பு, குடும்ப அட்டை போன்றவை வழங்கப்படுகின்றன. இவற்றை வழங்காமல் இருந்தாலே அவர்கள் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை காலி செய்துவிட்டு போய்விடுவார்கள். ஆதலால் தமிழக அரசு இனியாவது இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story