ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் ஒரு நிலச்சரிவு : போக்குவரத்து பாதிப்பு
ஏற்காடு மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலைப் பாதையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக ஏற்காட்டில் பலத்த மழை பெய்தவண்ணமே உள்ளது. இந்த மழையின் காரணமாக கடந்த மாதம் ஏற்காட்டின் முக்கிய சாலையான ஏற்காடு மலை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது .
அதனால் அந்த பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஏற்காட்டின் மற்றொரு பாதையான குப்பனூர் சாலையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது . இந்த நிலையில் அதன் பின்னர் பெய்த மழையில் குப்பனூர் பாதையிலும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை சரி செய்யப்பட்டது . தற்போது இந்த இரண்டு சாலையிலும் கன ரக வாகனகள் செல்ல தடை விதிக்கப்பட்டு பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இருந்து வரும் நிலையில் இன்று இரவு ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 60 அடி பாலத்தின் அருகில் உள்ள சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலச்சரிவில் ராட்சச பாறைகள் இரண்டு சாலையின் நடுவில் உருண்டு கிடந்தது .
இந்த நிலச்சரிவு காரணமாக அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் அங்கேயே நிறுத்தப்பட்டது, பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலை துறையினர் சாலையில் கிடந்த ராட்சச பாறை மற்றும் மண்ணை சாலையின் ஒரு புறமாக ஒதுக்கி வைத்தனர். அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த வாகனங்கள் தற்காலிகமாக சென்று வர வழிவகை செய்தனர்.
இந்த நிலச்சரிவின் காரணமாக மலை பாதையில் சுமார் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் வேறு எங்காவது நிலச்சரிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை ஓட்டிசெல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu