Salem Government Hospital Fire Accident சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து :அமைச்சர் ஆய்வு

Salem Government  Hospital Fire Accident  சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மின் கசிவால்  திடீர்  தீ விபத்து :அமைச்சர் ஆய்வு
X

மின் கசிவால் ஏற்பட்ட தீயணை செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு  படையினர் அணைத்தனர்.

Salem Government Hospital Fire Accident சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் கசிவினால் ஏற்பட்ட புகை பாதிப்புகள் சரிசெய்யப்பட்டது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு நேரில் ஆய்வு செய்தார்.

Salem Government Hospital Fire Accident

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் கசிவினால் ஏற்பட்ட புகை பாதிப்புகள் சரிசெய்யப்பட்டது குறித்து இன்று (நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இன்று காலை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல் தளத்தில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக புகை பரவியது. உடனடியாக புகை பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.இதனையடுத்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் புகை பாதிப்பு ஏற்பட்ட அரசு மருத்துவமனையின் முதல் தளத்தில் ஆய்வு மேற்கொண்டு, எவ்வாறு மின் கசிவு ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவமனை முதல்வர் மற்றும் பொதுப் பணித்துறையின் மின் பிரிவு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

Salem Government Hospital Fire Accident


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக நோயாளிகள் வேறு அறைக்கு மாற்றபப்ட்டனர். (கோப்பு படம்)

மேலும், சிகிச்சைக்குவரும் நோயாளிகளுக்கு இதனால் எவ்வித இடையூறுகளும் இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்தும், இவ்விடத்தில் மீண்டும் இயல்பான மருத்துவச் சேவைகளை உடனடியாகத் தொடர மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, கலெக்டர் . கார்மேகம், சேலம் எம்.பி..எஸ்.ஆர். பார்த்திபன் , சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் ஆராய்ச்சி டாக்டர் சங்குமணி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் மணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!