சேலம் புதிய டபுள் டக்கர் பஸ்ஸ்டாண்ட் திறப்பு எப்போது ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேலம் புதிய டபுள் டக்கர் பஸ்ஸ்டாண்ட் திறப்பு எப்போது ?  பொதுமக்கள் எதிர்பார்ப்பு
X

salem double decker bus stand-சேலத்தில்  கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம்.

salem double decker new bus stand-சேலம் மாநகரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் எப்போ திறப்பீங்க..என்று காத்திருக்கிறது பஸ் ஸ்டாண்ட்.

சேலம்:

சேலம் மாநகரின் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கார்ப்பரேஷன் சார்பில் கட்டப்பட்ட டபுள் டெக்கர் பஸ் ஸ்டாண்ட் 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா எப்போது என பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்திலுள்ள குக்கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் அனைத்தும் இந்த பஸ்ஸ்டாண்டில் இருந்துதான் செல்லும் . இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன்பு சேலம் கார்ப்பரேஷன் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த பஸ் ஸ்டாண்டை முழுவதுமாக அகற்றிவிட்டு டபுள் டெக்கர் பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது. இப்பஸ்ஸ்டாண்ட் கட்டி முடிக்கும் வரை ஏற்கனவே போஸ்மைதானமாக இருந்த இடத்தினை தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்றப்பட்டது. போஸ் மைதானத்திலிருந்த நேரு கலையரங்கமும் முழுவதுமாக இடிக்கப்பட்டு தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

சேலம் மாநகரில் கட்டப்பட்டுள்ள புதிய டபுள் டெக்கர் பஸ் ஸ்டாண்ட்.

மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக சேலம் மாநகரில் புதிய டபுள் டெக்கர் பஸ் ஸ்டாண்ட் அருகில் டூவீலர் நிறுத்த புதிய ஸ்டாண்ட் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துவிட்டது. அதேபோல் இதே பகுதியில் பெரியார் வணிக வளாகம் கட்டப்பட்டு இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.

சேலம் டவுன் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும் புதியதாக வாகன ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் ஆனந்தா மேம்பால பகுதியிலும் புதிய வாகன ஸ்டாண்ட் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இவையனைத்தும் ஏற்கனவே ஆளும் கட்சியாக இருந்த அதிமுக காலத்தில் துவங்கப்பட்டது. தற்போது ஆட்சி மாறிய பின்னர் நடுவில் பல தொய்வுகள் ஏற்பட்டாலும் விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என மாநகர மேயர் அறிவித்துள்ளார்.

சேலம் டபுள் டெக்கர் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டால் இப்பகுதியின் போக்குவரத்து நெருக்கடியானது குறைந்து விடும். உள்ளே பல கடைகள் கட்டப்பட்டுள்ளதால் தமிழகத்தில் சிறந்த பஸ் ஸ்டாண்டாக சேலம் டபுள் டெக்கர் பஸ் ஸ்டாண்ட் பெயரெடுக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

தொடர் பராமரிப்பு தேவை :

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செலவிடப்படும் பணம் பொதுமக்களின் வரிப்பணம் தான். எனவே தற்போது சேலம் மாநகரில் புதியதாக கட்டப்பட்டு விரைவில் திறப்பு விழா காணப்பட உள்ள டபுள் டக்கர் பஸ்ஸ்டாண்ட், பெரியார் பேரங்காடி வணிக வளாகம், மற்றும் வாகன ஸ்டாண்ட் அனைத்திலுமே மாநகராட்சி அதிகாரிகள் உரிய முறையில் பராமரிக்க தனியே பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

  • 1
  • 2

  • Next Story