Police Planned To Watching Tower ஆஹா வந்துடுச்சு...தீபாவளி... சேலத்தில் கடைகளில் கூட்ட நெரிசல் போலீஸ் கோபுர கண்காணிப்பு ஏற்பாடு

Police Planned To Watching Tower  ஆஹா வந்துடுச்சு...தீபாவளி...   சேலத்தில்  கடைகளில்  கூட்ட நெரிசல்   போலீஸ் கோபுர கண்காணிப்பு ஏற்பாடு
X

உயர் மட்ட கண்காணிப்பு கோபுரத்திலிருந்து கூட்டத்தினைப் பார்வையிடும்  போலீஸ் (கோப்பு படம்)

Police Planned To Watching Tower தீபாவளி கூட்ட நெரிசலில் கொள்ளை வழிப்பறியைத் தடுக்க போலீஸ் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.

Police Planned To Watching Tower

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 13 நாட்களே உள்ளதால் இப்போதே வெளியூர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஜவுளி வாங்க புறப்பட்டு விட்டதால் கடைகளில் கூட்டம் சேரத் துவங்கியுள்ளது.

சனி,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கமாகவே கூட்டம் அதிகம் காணப்படும். தற்போது நவம்பர் 12 ந்தேதி தீபாவளிப் பண்டிகை வருவதால் அதற்கான ஜவுளிகளை எடுக்க அனைவரும் குடும்பத்துடன் சாரை சாரையாக கடைகளுக்கு வரத்துவங்கியுள்ளதால் வழக்கத்தினை விட கூட்ட நெரிசல் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது.

தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இரண்டு. ஒன்று தீபாவளி மற்றொன்று பொங்கல். பொங்கலைப் பொறுத்தவரை விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளோர் நகர வாசிகளை விட சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அப்போதும் ஜவுளி எடுப்பார்கள். ஆனால் அனைத்து மக்களும் உலகம் பூராவும் உள்ள தமிழ் மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது தீபாவளி மட்டுமே.இதனால் இந்துக்களின் முக்கிய பண்டிகையாக இது கருதப்படுவதால் ஜவுளி, பட்டாசு, இனிப்பு என முப்பரிமாணத்தில் களை கட்டும் பண்டிகையாக இது பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.

மேலும் இது போனஸ் நேரம் என்பதால் ஒரு சிலர் நகைக்கடைகளுக்கும் விசிட் அடிக்கின்றனர். காரணம் ஐப்பசி மாதம் பிறந்து பல முகூர்த்தங்கள் நடந்தது. திருமணமான புது தம்பதிகளுக்கு வரப்போகும் தீபாவளி தலை தீபாவளி என்பதால் மாப்பிள்ளைக்கு மோதிரம், செயின் மற்றும் பெண்ணுக்கு தேவையான நகைகளை வாங்க என படையெடுப்பதால் நகைக்கடைகளிலும் வழக்கத்தினை விட சற்று கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

சேலத்தினைப் பொறுத்தவரை முன்பு கடைவீதிகளில் மட்டுமே கூட்டம் அதிகம் காணப்படும். தற்போது புது பஸ்ஸ்டாண்ட் பகுதிகளிலும் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் அதிகம் இருப்பதால் கூட்டம் அங்கேயும் சேரத்துவங்கியுள்ளது. கூட்டம் என்றாலே சேலத்தில் உள்ள ஜேப்படிகளுக்கு கொண்டாட்டந்தான். இதனால் போலீசார் இவர்களைக் கண்காணிக்க உயர்மட்ட கோபுரம் அமைக்கும் பணிகளைத் துவங்கியுள்ளனர்.

Police Planned To Watching Tower


சேலம் மாநகரில் போலீஸ் துறையால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம் (கோப்பு படம்)

இதனால் புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் ஏற்காடு, பெங்களூரு பஸ்கள் நிற்கும் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து அதில் போலீசாரை பணியமர்த்தி நோட்டமிடுகின்றனர். இந்த கோபுரங்கள் உள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசாரை தொடர் பணிகளில் அமர்த்தி கண்காணிக்க உள்ளனர். மேலும் கோவை பஸ்கள் நிற்கும் பகுதி, பஸ்கள் உள்ளே நுழையும் பகுதிகளில் இரு கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் நெரிசல் அதிகம் காணப்படும் இடங்களான சின்னக்கடைவீதி, மற்றும் கடைவீதி, டிவிஎஸ் பஸ்ஸ்டாப், மற்றும் 5 ரோடுபகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து நோட்டமிட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் நாளுக்கு நாள் கூட்டம் வழக்கமான நாட்களில் மதியத்திற்கு மேல் அதிகம் காணப்படும். இரவிலும் கடைகள் அதிக நேரம் திறந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் இதனை பயன்படுத்தி பல வழிப்பறி திருடர்கள் திட்டமிட்டு கொள்ளையடிப்பதை முறியடிக்கும் வகையில் சேலம் போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ளது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. இது மட்டும் அல்லாமல் அவ்வப்போது இந்த பகுதிகளில் மைக் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வும் செய்வார்கள் என்பதால் பொதுமக்களும் சற்று விழிப்புடன் செல்லவேண்டியது அவரவர்களின் கடமையாகும்.

Tags

Next Story