/* */

இராணிப்பேட்டையில் உள்ள பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு

வாலாஜாப்பேட்டைமற்றும் சுற்றுவட்டாரங்களில் திற்ந்திருந்த அரசு, தனியார் பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

இராணிப்பேட்டையில் உள்ள பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
X

பள்ளியில் உள்ள குடிநீரின் தரத்தை பரிசோதிக்கும் கலெக்டர் 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு உத்தரவுபடி 9,10,11மற்றும்12வகுப்புகள் நடத்த பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ,மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வேலம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கீழ்புதுப்பேட்டை பிரைட் மைன்ட்ஸ் வித்யோதயா சிபிஎஸ்இ ஆகிய பள்ளிகளுக்கு சென்று பாதுகாப்பு நடைமுறைகளைஆய்வு செய்தார் .

அதில்,அனைத்து வகுப்பறைகளிலும் அரசு வழிகாட்டுதல்படி மாணவ, மாணவியர்கள் அமர வைக்கபட்டுளனரா?, அங்கு, கிருமிநாசினி உள்ளதா? என்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளை ஆய்வு செய்து கழிப்பறைகளை மேலும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது ஆட்சியர், மாணவ மாணவர்களிடம் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுள்ளார்களா? என்று கேட்டு, இல்லையென்றால் உடனடியாக போட்டுக் கொள்ளும்படி கூறவேண்டும் என்றார். தடுப்பூசி முகாம்கள் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நடக்கின்றது. எனவே, பெற்றோரிடம், தடுப்பூசி போட அஞ்ச வேண்டாமென தெளிவுபடுத்திட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார.

பள்ளிக்கு வரும்போது ஏதேனும் உடல் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே ஆசிரியரிடம் தெரிவித்து விரைந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மாணவர்கள் அச்சப்படாமல் பள்ளிகளுக்கு வர அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது . குறைகள் இருந்தால் உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்றும் அறிவுரைகளை கூறினார்

இதனையடுத்துமாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் குறித்தும் மின் விளக்குகள் , மின்விசிறிகள் அனைத்து வகுப்பறையிலும் உள்ளது உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா, மாவட்டக்கல்வி அலுவலர் அருளரசன்,வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 1 Sep 2021 5:20 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !