/* */

ராணிப்பேட்டையில் விவசாயிகள் ஆர்பாட்டம்

ராணிப்பட்டையில் சுற்றுசூழல் மாசுப்படுவதை கண்டித்தும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வேளாண் கடனை தள்ளுபடி செய்ய கோரியும் விவசாயிகள் ஆர்பாட்டம்.

HIGHLIGHTS

ராணிப்பேட்டையில் விவசாயிகள் ஆர்பாட்டம்
X

ராணிப்பேட்டை முத்துக்கடையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆர்பாட்டம் மாவட்டத்தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் உதயகுமார் மற்றும் இளைஞரணி மாநில செயலாளர் சுபாஷ் மற்றும் லோகநாதன், ரகுபதி, ஏகாம்பரம் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடனை தள்ளுபடி செய்யவேண்டும், ஜப்தி நடவடிக்கையை கைவிட வேண்டும், சாலை விரிவாக்கங்களில் விவசாயிகள் பாதிக்காத வகையில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், பாலாறு மற்றும் சுற்றியுள்ள கிளை ஆறுகளில் தோல் கழிவுகள் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்கவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரோமிய கழிவுகள் தேங்கியுள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும், விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும், நெல் குவின் டாலுக்கு ரூ.3500 கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயத்திற்கும் பயன்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

Updated On: 16 Feb 2021 8:34 AM GMT

Related News