/* */

பெண்ணை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை

குற்றவாளி பூபதி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

HIGHLIGHTS

பெண்ணை கொலை செய்த வழக்கு:  குற்றவாளிக்கு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை
X

ஆசைக்கு இணங்காத பெண்ணை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பூபதி

ஆசைக்கு இணங்காத பெண்ணை கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் இன்ரு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள புலியூரை சேர்ந்த பூபதி என்ற இளைஞர், களரிபட்டியைச் சேர்ந்த வெள்ளைக்கண்ணு மனைவி சத்தியாவிடம் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட சத்யாவின் உறவினர்கள் கண்டித்தனர். இதையடுத்து பூபதியிடம் பழகுவதை, சத்தியா நிறுத்திக் கொண்டாராம். எனினும் பூபதி தொடர்ந்து சத்யாவை கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் களிரிபட்டியில் உள்ள சத்யாவின் வீட்டுக்கு சென்ற பூபதி கட்டாயப்படுத்தினாராம். ஆனால், ஆசைக்கு இணங்க மறுத்த சத்யாவை, கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இந்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணையின் முடிவில் பூபதி, சத்யாவை கொலை செய்தது. உறுதியானதை யடுத்து அவருக்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சத்தியா தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து, குற்றவாளி பூபதி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Updated On: 14 Sep 2021 1:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  4. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  6. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  7. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  8. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  9. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  10. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...