/* */

புதுக்கோட்டை பிரஹதாம்பாள்-கோகர்ணேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழா தொடக்கம்

கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கிய சித்திரை திருவிழா 05.05.2022 முதல் 14.05.2022 வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை பிரஹதாம்பாள்-கோகர்ணேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழா தொடக்கம்
X

மலர் அலங்காரத்தில் பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர்

புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் ஆலய சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. திருவிழா 05.05.2022 முதல் 14.05.2022 வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

இதைமுன்னிட்டு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் உற்சவர் மலர் அலங்காரத்தில் வீதி உலா காட்சியளித்தனர். இதில், அறங்காவலர் குழுதலைவர் செந்தில்குமார் திருக்கோயில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் ஆலய குருக்கள், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ஆலயச்சிறப்பு : இத்தலம் உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு (கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக் கிறார்கள். திருகோகர்ணம் குடவரைக் கோயில் ஆகும். குடவரைக் கோயில்கள் என்பவை, செயற்கையான கட்டுமா னங்கள் இல்லாமல், முழுமையான பாறைப் பகுதியை அப்ப டியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை. திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச் சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடுவில் தனி அறையில் பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக் கிறது.

அதற்கு முன்னால் உள்ள மண்டபப் பகுதியில் இடப்புறச் சுவரில் விநாயகரும், வடப்புறச் சுவர்ப் பகுதியில் கங்காதரமூர்த்தியும் வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.இந்த மண்டபப் பகுதி முழுவதும் நான்கு தூண்களின் மீது அமைந்துள்ளது போல் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. சந்நிதியின் இடப்புறம் உள்ள சுவரைக் கற்பனையால் விலக்கி விட்டுப் பார்த்தால் விநாயகர் திருமேனிக்குப் பின்புறமாகவும் பாறைச் சரிவு நீண்டிருப்பதைக் காணலாம்.

இந்தப் பாறைச்சரிவின் அடிப்புறத்தில், தரையோடு ஒட்டியதுபோல் ஏழு பெண் தெய்வங்களின் திருவுருவங்கள் குடைவரைக் கலையாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. இடப்புறம் வீரபத்திரர் திருமேனியும், வலப்புறக் கோடியில் விநாயகர் திருமேனியும் விளங்க, இடையில் ஸப்த கன்னிமார்கள் அல்லது ஸப்த மாதாக்கள் என்னும் திருநாமத்தோடு ஏழு பெண் தெய்வங்களின் திருமேனிகள் வடிக்கப்பட்டுள்ளன. பைரவி, இந்திராணி, மாகேஸ்வரி, நாராயணி, வராஹி, கௌமாரி, பிடாரி - என்ற இந்த ஸப்த மாதர்களின் திருமேனிகள் வெகு நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.

இந்தச் சிற்ப வடிவங்கள் ஏழாம் நூற்றாண்டுப் பல்லவர்களின் கலைப்பணிகளாக இருந்த போதிலும் இந்தக் கருவறைகளை உள்ளடக்கிய மண்டபப் பகுதிகள் பதினோராம் நூற்றாண்டுச் சோழர்களின் கலைப்பணி என நம்பப்படுகிறது. கி.பி. 1012 இல் அரசுரிமையேற்ற பரகேசரி முதலாம் ராஜேந்திரச் சோழன் காலத்தில் இந்த பிரகதாம்பாள் திருக்கோயில் எடுப்பிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு வியப்பாக, திருகோகர்ணம் திருக்கோயிலில்தான் மாடிப்பகுதி என்ற மேல் தளத்திலும் தெய்வத் திருமேனிகள் இடம் பெற்றுள்ளன. இந்த மாடிப் பகுதியில் முதலாம் ராஜேந்திரன் காலக் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது.

இந்த மாடியில் முருகன் வள்ளி தேவஸேனாவுடன் எழுந்த ருளியுள்ள திருக்கோவிலுக்குத் தென்புறம் உள்ள பாறைச் சரிவில் காணப்படுகிறது. கட்டுமானங்கள் இல்லாமல் பார்த்தால் கோகர்ணேசுவரர், சப்த கன்னிமார் திருமேனிகள் உருவாகக்கப்பட்டுள்ள பாறையின் மேல் பகுதியில் இக்கல் வெட்டு அமையும். முருகன் கோயிலை ஒட்டி வடபுறச் சுவருக் கு அப்பால் பாறை நீண்டு உயர்ந்திருக்கிறது. மேற்குப் புறப்பாறைப் பிளவில் சுனை, வற்றாத நீர்வளத் தோடு விளங்குகிறது.

இங்குள்ள கோகர்னேஸ்வரர் கோயிலின் மேல்மாடத்தில் ஒரே கல்லில் 1008 ருத்ராட்ச லிங்கங்கள் அமைந்திருப்பது கண் கொள்ளாக் காட்சியாகும். இக்கோவில் தெற்கு வடக்காக 680 அடி நீளத்திலும் கிழக்கு மேற்காக 190 அடி அகலத்திலும் அமைந்துள்ளது. இக்கோவில் தெற்கு நோக்கியும், சந்நிதிகள் கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.

இந்த கோவில் நித்யோசவம் என்று சொல்லக்கூடிய மிக பெரிய சிறப்புடையதாக இருந்தது. நித்யோசவம் என்றால் தினந்தோறும் திருவிழா நடத்துவதாக ஐதீகம். சமீப காலத்தில் 12 மாதமும் திருவிழாக்கள் நடந்த கோவில் முந்தய காலத்தில் 20 நாட்களுக்கு உள்ளேயே சுவாமி புறப்பாடும் 10 நாட்களுக்கு வெளியிலேயே திருவிழா என்று சொல்லப்படும். காலத்தினுடைய நிர்பந்தத்தினால் இப்போது 12 மாத திருவி ழாக்கள் எல்லாம் நின்று போய் 3 திருவிழாக்கள் தான் நடைபெறுகிறது.


Updated On: 5 May 2022 2:00 PM GMT

Related News