/* */

தெருவோர வியாபாரிகள், தொழிலாளர்கள் புதுகை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட தெருவோர வியாபாரிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தெருவோர வியாபாரிகள், தொழிலாளர்கள்  புதுகை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை மாவட்ட தெருவோர வியாபாரிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்ட தெருவோர வியாபாரிகள் தொழிலாளர்கள்  சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட தெரு வியாபாரிகள், தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், 2014ம் ஆண்டு மத்திய அரசு சட்டத்தின் அடிப்படையில் 2015ம் ஆண்டு தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சட்டம் மற்றும் விதிகள் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து அனைத்து தெரு வியாபாரிகளுக்கும் வியாபார சான்று மற்றும் பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

நகர்ப்புற மேம்பாடு திட்டப்படி, தெரு வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்கான திட்டங்கள் இருந்தும் இதுவரை முறையாக அமல்படுத்தப்படவில்லை எனவே, இதனை அமல்படுத்தவும் தெரு வியாபாரிகளை, தனியார் மற்றும் கந்து வட்டி கொடுமையில் இருந்து மீட்க அனைவருக்கும் வங்கிக் கடன் வழங்கவும், முறையாக திரும்ப வசூலிக்கும் ஏற்பாடும் செய்துதரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தெருவோர வியாபாரிகள், தொழிலாளர்கள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.

Updated On: 2 July 2021 7:15 AM GMT

Related News