/* */

கழிவு நீர் கலப்பதாக புகார்: குளத்தை நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்

குளத்தில் கழிவுகளை அகற்றிடவும் தனியார் வாகனங்கள் மனிதக்கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டுமென ஆட்சியர் உத்தரவிட்டார்

HIGHLIGHTS

கழிவு நீர் கலப்பதாக புகார்:  குளத்தை   நேரில்  ஆய்வு செய்த  மாவட்ட கலெக்டர்
X

புதுக்கோட்டை நியூ டைமண்ட் நகர் அருகே உள்ள ஓட்டக்குளம் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட நியூ டைமண்ட் நகர் அருகே உள்ள ஓட்டக்குளத்தில் தொடர்ந்து கழிவுநீர் மற்றும் மனிதக் கழிவுகளை வாகனத்தின் மூலம் கொண்டு வந்து குளத்தில் கொட்டுவதால், ஓட்டக்குளத்தில் உள்ள தண்ணீர் சாக்கடை நீராக மாறி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

தனியார் வாகனங்கள் மனித கழிவுகளை குளத்தில் கழிவு நீரை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் தண்ணீர் மாசுபடுவதுடன் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது . மேலும், பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் கழிவுநீர் கலந்து தொற்று பரவ கூடிய அபாயமும் உள்ளதாகவும், இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, ஓட்டக்குளம் பகுதியை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்தக்குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றிட வேண்டுமெனவும் தனியார் வாகனங்கள் மனிதக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.இதில் கோட்டாட்சியர் அபிநயா , நகராட்சி ஆணையர் நாகராஜ், தாசில்தார் செந்தில், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Updated On: 26 Aug 2021 5:15 AM GMT

Related News