/* */

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலக்கியப் பேரவை தொடக்க விழா

புதுக்கோட்டையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலக்கியப் பேரவை தொடக்க விழா நடைபெற்றது

HIGHLIGHTS

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலக்கியப் பேரவை தொடக்க  விழா
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற சிவாஜி இலக்கியப் பேரவை தொடக்க விழா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலக்கிய பேரவை தொடக்க விழா மற்றும் 96 ஆவது பிறந்தநாள் விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் உலக அரங்கில் முதல் மரியாதை கண்ட கலைத்தாயின் மூத்த மகன் சிங்கத்தமிழன் செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 96 ஆவது பிறந்தநாள் விழா 29 ஆம் ஆண்டு நிகழ்வாக.ரத்தினசாமி நாடார் அன்னக்கிளி அம்மாள் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் ஏ.சுப்பையா தலைமையில் மாணவ- மாணவிகள் கலை நிகழ்ச்சிகள், நல்லாசிரியர்கள், வாழ்நாள் சாதனையாளர்கள், சமூக சேவையாளர்கள், சான்றோர்களுக்கு விருது சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் நகரத் தலைவர்அசோகன் வரவேற்றார் திலகவதியார் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை தொடக்கி வைத்தார் நிகழ்ச்சியில் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை மாநிலத் தலைவர் கே.சந்திரசேகரன் கலந்து கொண்டு சிவாஜி கணேசன் பட காலண்டர் வெளியிட்டு மற்றும் சிவாஜி இலக்கிய பேரவையினை தொடக்கி வைத்தார்.

கவிஞர்கள் ஆர்எம்வீ.கதிரேசன், ப.வெங்கடேசன், சு.பீர்முகமது, காசாவயல் கண்ணன்,தளபதி ரவி, மா.கண்ணதாசன், வம்பன் செபா, நேசன் மகதி, கவின்பாரதி கவிஞர்கள் இணைந்து கவிச்சரம் என்ற தலைப்பில் பேசினார்கள். வாசி சிவாஜி ஒரு புத்தகம் என்ற தலைப்பில் கவிஞர் ஜீவி, சிகரம் தொட்ட சிறந்த கலைஞன் என்ற தலைப்பில் கவிஞர் ரமா ராமநாதன் , நாடு அறிந்த நடிகர் திலகம் என்ற தலைப்பில் கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி ம், ஊன் நடிக்கும் உயிர் நடிக்கும் என்ற தலைப்பில் முனைவர் மகா சுந்தர் ஆகியோர் பேசினர்.

மாவட்ட வர்த்தக கழக தலைவர் ஹாஜி சாகுல் ஹமீது, செயலாளர் சாந்தம் சவரிமுத்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர் சங்கத் தலைவர் மாருதி கண.மோகன் ராஜா, புதுகை வரலாறு நாளிதழ் நிறுவனர் சிவசக்திவேல் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கம்பன் கழகச் செயலாளர் ரா.சம்பத்குமார், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர்டாக்டர் கணேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத் அலி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நல்லாசிரியர்கள், வாழ்நாள் சாதனையாளர்கள், சமூக சேவையாளர்கள். மற்றும் சான்றோர்களுக்கு விருது வழங்கி கௌரவம் செய்து வாழ்த்துரை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் மு.காளிமுத்து, சு.பாலு, ஆ.சாந்தி, செ.ஜெயராஜ், வீ.சரோஜா, கா.சேகர். இளநிலை பயிற்சி ஆசிரியர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஜோதிமணி, தவமணி, மா.மதியழகன், வி.டைட்டஸ், எம்.கவிதா, இ.அபிராமிசுந்தரி, நல்லாசிரியர் விருது பெற்றதை பாராட்டி சிவாஜி விருது வழங்கப்பட்டது.

நகர் நல நாயகர் விருதினை .சேட் என்ற அப்துல் ரகுமான்,, புதுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ராஜா முஹம்மது புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கருணைச்செல்விரவிக்குமார், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க மேனாள் தலைவர் சிவக்குமார், மரங்களின் தந்தை மரம் ராஜா, அப்போலோ மருத்துவமனை வி.தனவேந்தன், எம்.என்.ராமச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் கே.முத்துராமலிங்கம், 515 கணேசன், ஜோ.டெய்சிராணி ஆகியோருக்கு சிறந்த சமூக சேவையாளர்களுக்கு சிவாஜி விருது வழங்கப்பட்டது.

வாழ்நாள் சாதனையாளர்கள் செம்பை மணவாளன், கே.டி.கந்தசாமி, புனிதா, .ரங்கராஜன், அழகர்சாமி ஆகியோருக்கு சிவாஜி விருது வழங்கப்பட்டது மேலும் ரத்தக் கொடையாளர்களான பிரகதீஷ் பரணி, மா.பிரேம்குமார், செந்தில்குமார், த.சங்கர், பா.சஞ்சய், சுவாமிநாதன் ஆகியோருக்கு சிவாஜி விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சேது கார்த்திகேயன், நகர்மன்ற உறுப்பினர் பால்ராஜ், விஜயகுமார், ஜான்சி ராணி மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக கவிஞர் புதுகை புதல்வன் நன்றி கூறினார்

Updated On: 21 Dec 2023 8:30 AM GMT

Related News