/* */

அடப்பன் குளத்தை ஆய்வு செய்தார் புதுக்கோட்டை எம் எல் ஏ

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அடப்பன் குளத்தை மக்களின் கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட அடப்பன் குளத்தில் நடைபாதைகளில் முள் செடிகள் மண்டிக் கிடப்பதால் காலை நேரங்களில் அந்த குளத்தை சுற்றி பொதுமக்கள் நடந்து செல்வதற்கு பெரும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இன்று அடப்பன் குளத்தை நேரடியாக ஆய்வு செய்து குளத்தை சுற்றி உள்ள முள் செடிகளை அகற்ற நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து அந்த குளத்தை சுத்தம் செய்யும் பணியில் தற்போது நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

.

Updated On: 10 July 2021 11:29 AM GMT

Related News