பிரியாவின் மூட்டு சவ்வு ஆப்பரேஷன்.. அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

பிரியாவின் மூட்டு சவ்வு ஆப்பரேஷன்.. அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?
X

உயிரிழந்த கால்பந்தாட்ட மாணவி பிரியா.

மூட்டு சவ்வு ஆப்பரேஷன் (Surgical procedure to rectify ligament tear) என்பது மற்ற எத்தனையோ ஆப்பரேஷன்களோடு ஒப்பிடும் போது ஒரு சாதாரண ஆப்பரேஷன் தான்.

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழப்புக்கு மூல காரணம் இடுப்பு பட்டையை (tourniquet) சரியான காலக்கெடுவிற்குள் கழட்டாததே என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்யமர் அரசியல் குழுவின் சூரியநாராயணன் தெரிவிக்கையில், என் மகனும் பொது அறுவை சிகிச்சை பிரிவில் மாஸ்டர்ஸ் டிகிரி படித்து (M.S in General Surgery) தமிழ்நாடு அரசாங்க மருத்துவ மனையில் பணி புரிகின்ற ஒரு அறுவை சிகிச்சை மருத்துவன். வாரத்தில் சராசரியாக பத்து முதல் இருபது ஆப்பரேஷன்கள் வரை செய்யும் சர்ஜிக்கல் டீமில் ஒருவன்.

ஒரு ஆப்பரேஷன் டீம் என்பது அறுவை சிகிச்சையில் நன்கு அனுபவம் உள்ள ஒரு சீனியர் டாக்டர், ஒரு பயிற்சி டாக்டர் அல்லது ஒரு ஜீனியர் டாக்டர் மற்றும் தியேட்டர் நர்ஸ் என சொல்லப்படுகின்ற ஆப்பரேஷன் தியேட்டர் புரஸீஜர்களுக்கு படித்த நர்ஸ்கள் இரண்டு பேர் (ஆண் நர்ஸ் அல்லது பெண் நர்ஸ்), மயக்க மருந்து கொடுக்கும் அனஸ்த்தடிஸ்ட் ஆகியோர் அடங்கியது. செய்யப்படும் ஆப்பரேஷன்களை பொறுத்து இந்த டீமின் எண்ணிக்கை மாறுபடும்.

Now let's see how this operation will be done. ஆப்பரேஷன் எப்படி செய்யப்படுவது?

இப்போது அந்த பெண் பிரியாவை ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு வந்த பின் மயக்க மருந்து கொடுக்கும் அனஸ்த்தடிஸ்ட் டாக்டர் அவளை செக் செய்த பின் இடுப்புக்கு கீழே மரத்து போகுமாறு இடுப்பில் ஒரு இன்ஜெக்ஷன் போடுவார். சுமார் 10 நிமிடத்தில் இடுப்புக்கு கீழே உள்ள இரு கால்களும் முழுக்க மரத்து போய்விடும்.

It's called local anaesthesia. Sometimes the surgery will require general anaesthesia.

இது லோக்கல் மயக்க மருந்து என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் அறுவை சிகிச்சைக்கு பொது மயக்க மருந்து தேவைப்படும்.

பின் இடுப்புக்கு கீழே செல்லும் ரத்த ஓட்டத்தை குறைப்பதற்காக இடுப்பில் ஒரு பட்டையை இறுக்கமாக கட்டிவிடுவார்கள். It's called tourniquet. அதை செய்வது பெரும்பாலும் ஆப்பரேஷன் தியேட்டர் நர்ஸ். (ஆண்)

அது கால்களுக்கு செல்லும் ரத்தத்தை வெகுவாக கட்டுப்படுத்தும். மூட்டு சவ்வை சரி செய்ய ஆப்பரேஷன் செய்யும் போது ரத்தம் பீறிட்டு வெளியே சென்று வேஸ்ட் ஆகாமல் தடுக்கவே இந்த tourniquet கட்டப்படுகின்றது. இந்த பட்டையை அதிக பட்சமாக இரண்டு மணி நேரம் தான் கட்டியிருக்க வேண்டும். பின் கண்டிப்பாக அவிழ்த்து விட்டு விட வேண்டுமாம். இல்லையென்றால் ரத்த ஓட்டம் முற்றிலுமாக தடை பட்டு அந்த பகுதியில் உள்ள தசைகள் முழுவதுமாக செயல் இழந்து விடக்கூடிய அபாயம் உள்ளது.

அந்த மூட்டு சவ்வை சரி செய்யும் ஆப்பரேஷன் முடிந்த பின்னர் தையல் போட்டு பாண்டேஜ் கட்டின பின் ரத்தக்கசிவு இல்லை என்பதை சீனியர் டாக்டர் உறுதிப்படுத்திக்கொண்ட உடன் அந்த இடுப்பில் கட்டியிருக்கும் பட்டையை (tourniquet) அவிழ்த்து விட தியேட்டர் நர்ஸ்ஸிடம் சொல்ல அவர்கள் அந்த பட்டை அவிழ்த்து விட்ட பின்னர் ரத்த ஓட்டம் பழையபடி கால்களில் சீராக செல்கிறதா என்பதை சீனியர் டாக்டர் கவனித்த பின்னர் அந்த பெண்ணை வார்டுக்கு (Post operative ward) அனுப்பி விடுவார்கள். இதுதான் நார்மலாக நடந்திருக்க வேண்டியது.

ஆனால் இந்த பெண் விஷயத்தில் என்ன நடந்து இருக்கிறது என்றால் ஆப்பரேஷன் முடிந்த பின்னர் இடுப்பில் கட்டியிருந்த tourniquet எனப்படும் அந்த பட்டையை அந்த நர்ஸ் கழட்டவே இல்லை. அதை அந்த இரு டாக்டர்களும் கவனிக்காமல் அந்த பேஷண்ட்டை ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வார்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

Those two doctors have not apparently followed the correct protocols i.e procedures in the final stages of operation

இரண்டு மணி நேரத்தில் கழட்டப்பட வேண்டிய அந்த tourniquet பட்டையை எட்டு மணி நேரத்திற்கும் மேலாக கழட்டாமல் அப்பிடியே விட்டு வைத்திருந்த காரணத்தால் அந்த பெண்ணின் காலுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் முழுமையாக தடைப்பட்டு காலில் உள்ள தசைப்பகுதி முற்றிலுமாக செயல் இழந்து விட்டது.

அதன் காரணமாகவே அந்த பெண்ணின் பாதிக்கப்பட்ட காலை வெட்டி எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது.

காலை வெட்டி எடுத்த பின்னரும் கூட அந்த பெண் உயிர் பிழைத்திருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு காலை வெட்டி எடுத்த பின்னர் அந்த காயம் செப்டிக் ஆகி செப்ஸிஸ் (sepsis) என்கிற நிலை வந்து அந்த பெண்ணின் உடல் முழுவதும் பரவி அந்த பெண்ணின் பல உடல் உறுப்புக்கள் ஒரே சமயத்தில் செயல் இழந்து போய் மரணம் சம்பவித்து விட்டது.

(Death is caused by multi organ failure due to infected wounds and sepsis)

இதற்கு மூல காரணம் அந்த இடுப்பு பட்டையை (tourniquet) சரியான காலக்கெடுவிற்குள் கழட்டாததே.

இந்த பட்டையை கழட்ட வேண்டியது அந்த தியேட்டர் நர்ஸின் வேலைதான் என்றாலும் அவர் அதை செய்ய வில்லை என்பதை கவனிக்காத அந்த டாக்டர்கள் மீதுதான் அந்த பழி விழும் என்பது அந்த டாக்டர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இது நிச்சயமாக டாக்டர்களின் கவனக்குறைவு என்றுதான் இப்போதைக்கு கருதப்பட வேண்டும்.

அதன்படிதான் அந்த டாக்டர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தீவிர விசாரணைக்கு பிறகே அந்த கவனக்குறைவு சம்பந்தமாக முழு விபரங்களும் தெரிய வரும்.

இன்றைக்கு தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கில் பல தரப்பட்ட ஆப்பரேஷன்கள் தினசரி செய்யப்படுகின்றன. மற்ற பல மாநிலங்களை ஒப்பிடும் போது நமது தமிழ்நாட்டு அரசு மருத்துவமனைகள் சிறந்த கட்டமைப்போடு இருப்பதாலும் தமிழக மருத்துவர்கள் இயற்கையாகவே நல்ல திறமைசாலிகளாக இருப்பதாலும் மருத்துவ மனைகளில் நோயாளிகள் உயிர் இழப்பது மிக குறைவாகவே நிகழ்கின்றன.

அத்தகைய சிறப்பான சேவைகளுக்கு ஒரு திருஷ்டி போல இந்த இளம் பெண்ணின் மரணம் அமைந்தது மிகவும் துரதிருஷ்டவசமானதுதான்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
நவீன வசதிகளுடன் 103 ரெயில் நிலையங்கள் புதுப்பிப்பு – பிரதமர் மோடியின் அதிரடி திறப்பு!