/* */

பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி

பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி
X

பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூர் அரசு மாதிரி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் கற்று கொடுக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்ப விளையாட்டை மத்திய' அரசின் 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு சிலம்பக் கலையை விளையாட்டிற்கு தனி முக்கியத்துவம் கொடுத்துள்ளதோடு, சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

இதனால், சிலம்ப கலையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள சிறார்கள் தற்பொழுது இதற்கான பயிற்சிகளை ஆங்காங்கே மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது.

இதில் மாணவர்கள் ஆர்வமுடன் சிலம்பக்கலை பயிற்சியை துவங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் சதாசிவம், பயிற்சியாளர் ராஜகோபாலன் உள்ளிட்ட ஆசியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.

Updated On: 22 Oct 2021 12:43 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!