திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு : கோயில் நிர்வாகம் அப்புறப்படுத்தியது

திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு : கோயில் நிர்வாகம் அப்புறப்படுத்தியது
X

திருத்தணி முருகன் கோயில்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான கடைகள் முன்பாக இருந்த ஆக்கிரமிப்பை கோயில் நிர்வாகம் சார்பாக அப்புறப்படுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சன்னதி தெருவில் திருக்கோயிலுக்கு சொந்தமாக 20 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளில் முறையாக ஏலம் விடுவதற்கு தேதி அறிவிக்கப்பட்டும் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. கடைகளுக்கு முன்பாக ஒரு

சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் யாரும் ஏலம் எடுக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. பல நேரங்களில் அழைத்து எச்சரித்து அறிவிப்பு செய்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லியும் அவர்கள் யாரும்

அகற்றாததால் வருகிற 7ஆம் மாதம் மீண்டும் கடைகளை ஏலம் நடத்துவதற்கு திருக்கோயில் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கடைக்கு முன்பாக ஆக்கிரமிப்பு செய்து உள்ள இரண்டு கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் கோவில் நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தினர்.

மற்ற கடைகளை நடத்தும் உரிமையாளர்கள் தற்போது ஊரடங்கு உள்ளதால் கொஞ்சம் கால அவகாசம் தந்தால் நாங்கள் அதை முறையாக காலி செய்கிறோம் என்று தெரிவித்திருப்பதால் கடிதம் மூலமாக எழுதித் தரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

கோவில் நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத பட்சத்தில் நடவடிக்கை தொடரும் என கோயில் இணை ஆணையாளர் பரஞ்ஜோதி உதவி ஆணையாளர் ரமணி ஆகியோர் தெரிவித்தனர். கோயில் நிர்வாகத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் நடவடிக்கை எடுத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக கூறப்பட்டது. இதனால் இங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு