அரியலூரில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ

அரியலூரில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ
X

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா

தூய்மை பணியாளர்களுக்கு அரியலூரில்அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ


அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் 2,50,000 ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

கொரோனா தொற்றை கட்டுபடுத்த தூய்மை பணியாளர்கள் அதிகளவில் போராடி வருகின்றனர்.இந்நிலையில் அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு தனியார் நிறுவனங்களின் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.

இதில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்து கொண்டு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கடுகு, வெந்தயம், உப்பு, சோப்பு, சானிடைசர், முககவசம் உள்ளிட்ட 19 அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.இதில் 201 தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பொறுப்பு மனோகர், சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு