வே.க.பட்டி கொங்குநாடு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெபற்ற மாணவ மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவிகள் சரண்யா மற்றும் இந்து ஆகியோர் 600க்கு 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவிகள் சிலேகா மற்றும் சுஷ்மிகா ஆகியோர் தலா 588 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம் பெற்றுள்ளனர். மாணவர் கவின் 586 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் பெற்றுள்ளார். இப்பள்ளி மாணவ மாகணவிகள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 161 மாணவர்களில்36 பேர் 600க்கு 550க்கு மேல் மதிப்ªண்கள் பெற்றுள்ளனர். ,91 பேர் 500க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா; பாடவாரியாக பெற்ற அதிக மதிப்பெண்கள் விபரம்: தமிழ் 99 ,ஆங்கிலம் 99, கணிதம்100, இயற்பியல் 99, வேதியியல் 100, கம்ப்யூட்டர் சயின்ஸ் 100, உயிரியல் 99, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 100, பொருளியலில் 100, வணிகவியல் 100, அக்கவுண்டன்சி 99, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் கணிதத்தில் 6 பேரும், வேதியியலில் 2 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 29 பேரும், வணிகவியலில் ஒருவரும், பொருளியலில் ஒருவரும், வணிககணிதம் மற்றும் புள்ளியியலில் 2பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 2 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மணவிகளை பள்ளி தலைவர் ராஜா, தாளாளர் டாக்டர் ராஜன், மெட்ரிக் பள்ளி ஆலோசகர் ராஜேந்திரன், செயலாளர் சிங்காரவேலு, இயக்குனர் ராஜராஜன், முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu