நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 3ம் பாலினத்தவருக்கான சிகிச்சை மையம் துவக்கம்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 3ம் பாலினத்தவருக்கான சிகிச்சை மையம் துவக்கம்
X

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை, கலெக்டர் உமா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தினை கலெக்டர் துவக்கி வைத்தார்.

நாமக்கல்,

தமிழக சட்டசபையில் நடைபெற்ற, மானிய கோரிக்கையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு மருத்துவ சேவை மையம் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், ரூ. 15 லட்சம் மதிப்பில், புதிதாக மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு மருத்துவ சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தை கலெக்டர் உமா குத்துவிக்கேற்றி துவக்கி வைத்தார்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியின் 7வது தளத்தில் செயல்படும் இம்மையத்தின் வெளிநோயாளிகள் பிரிவு பிரதி வாரம் செவ்வாய் கிழமை, காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும். இப்பிரிவில் மன நல சிகிச்சை மருத்துவர், பொது மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், தோல் சிகிச்சை மருத்துவர் உள்ளடக்கிய மருத்துவர்களைக் கொண்டு 3ஆம் பாலினத்தவருக்கான பன்னோக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். இம்மையத்தில் பால்வினை நோய்கள் மற்றும் தொற்றா நோய்களை கண்டறிதல் மற்றும் சிகிச்சை, அனைத்து வித பொது அறுவை சிகிச்சைகள், பொது மருத்துவ சேவைகள், தோல் நோய்களுக்கான சிகிச்சைகள், மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்து சேவைகள் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story