தமிழக அரசின் விருது பெற சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் விருது பெற சமூக சேவகர்  மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
X

பைல் படம் 

தமிழக அரசின் விருது பெற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல்,

தமிழக அரசின் விருது பெற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

2025 ஆம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழாவின் போது, தமிழக அரசால் சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் தமிழக அரசின் அவார்ட்ஸ்.இன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டில் மட்டுமே வரவேற்கப்படுகின்றன. வருகிற 12.06.2025 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும்.

இவ்விருதுக்கான விதிமுறைகள்: தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருந்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும் இது குறித்து மேலும் விபரங்கள் பெற, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும், மாவட்ட சமூக நல அலுவலகத்தை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story