பள்ளிபாளையத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் வருகை மாவட்டத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை

பள்ளிபாளையத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் வருகை    மாவட்டத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை
X

பைல் படம் 

பள்ளிபாளையத்தில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் வருகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறப்பதற்கு கலெக்டர் தடை விதித்துள்ளார்.

நாமக்கல்,

பள்ளிபாளையத்தில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் வருகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறப்பதற்கு கலெக்டர் தடை விதித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ஆர்எஸ்எஸ் தேசியத் தலைவர் மோகன் பகவத் பள்ளிபாளையம் வந்துள்ளார். அவர் 2 நாட்கள் பயிற்சி முகாமில் கலந்துகொள்கிறார். இதையொட்டி நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் மேற்பார்வையில் பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் நாளை 8ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 9ம் தேதி ஆகிய 2 நாட்கள் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து நாமக்கல் கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார்.

Next Story