நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி    மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
X

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த, நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் தங்கவேல் பாராட்டு தெரிவித்தார்.

நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல்,

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவில் பயின்ற மாணவர் சக்தி 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவர் ஆல்பினஸ் ரூவஸ் 591 மதிபெண்கள் பெற்று 2 ஆம் இடம் பெற்றுள்ளார். மாணவி இனியா 589 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடம் பெற்றுள்ளார்.

மேலும், இயற்பியலில் 9 பேரும், வேதியியலில் 7 பேரும், உயிரியலில் 3 பேரும், கணிதத்தில் 6 பேரும், கம்ப்யூட்டர் சயின்சில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொழிப் பாடங்களான தமிழ், ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மொத்த மாணவர்களில் 590 மதிப்பெண்களுக்குமேல் 2 பேரும், 585 மதிப்பெண்களுக்கு மேல் 8 பேரும், 580 மதிப்பெண்களுக்கு மேல் 23 பேரும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 29 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 42 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மணவிகளுக்கு பள்ளி தாளாளர் தங்கவேல் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். குறிஞ்சி பள்ளி இயக்குனர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Next Story