நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு தினம் அனுஷ்டிப்பு

நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னால்    பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு தினம் அனுஷ்டிப்பு
X

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்தி தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், இந்திய பிரதமராகவும் பதவி வகித்து வந்த ராஜிவ்காந்தி தனது 47வது வயதில், கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி உயிரிழந்தார். அவரது 34ம் ஆண்டு நினைவு தினம் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், மாநகர தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ராஜிவ்காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சாந்தி மணி, தாஜ், செல்வம், பழனிவேலு, சரவணன் ராஜேந்திரன், மதிவாணன், லோகநாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள சிவபாக்கியம் முதியோர் இல்லத்தில் காமராஜ் தொண்டர்கள் அமைப்பாளர் ஏகாம்பரம் சார்பில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Next Story