கலைமகள் சபா மோசடி வழக்கில் தலைமறைவு குற்றவாளி வரும் 26க்குள் ஆஜராக நீதிபதி உத்தரவு

பைல் படம்
நாமக்கல்,
கடந்த 2006ம் ஆண்டு, கலைமகள் சபா என்ற நிறுவனம் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, அசையா சொத்துகளை வாங்கி குவித்ததுடன், பணத்தை முதலீடு செய்தோருக்கு திரும்ப வழங்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்சில், 28 பேர் கைது செய்யப்பட்டனர். இது சம்மந்தமான வழக்குகள் சென்னை உள்பட பல்வேறு கோர்ட்டுகளில் நடைபெற்று வருகிறது. நாமக்கல் சிஜேஎம் கோர்ட்டில், கலைமகள் சபா வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வள்ளலார் நகரை சேர்ந்த சுந்தரம் மகன் பாஸ்கர் மீது, கலைமகள் சபா மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவøர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, பாஸ்கர் கோர்ட்டில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர்மீது அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டும், அதை நிறைவேற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை கோர்ட்டும், போலீசாரும் மேற்கொண்டபோதும், அவர் தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில், நாமக்கல் சிஜேஎம் கோர்ட், பாஸ்கரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட பாஸ்கர், வரும் 26ம் தேதி, காலை 10:30க்குள், நாமக்கல் சிஜேஎம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu