நகை விற்பனை செய்ய வருவோரின் விபரங்களை, நகைக்கடை உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும்: போலீஸ் எஸ்பி உத்திரவு

நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் நடைபெற்ற, நகைக்கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் பேசினார். அருகில் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி, வணிகர் சங்க தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ஆகியோர்.
நாமக்கல்
நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில், தங்க நகைக்கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. போலீஸ் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள், தங்கள் கடைகளுக்கு, நகை விற்பனை செய்யவோ அல்லது உருக்குவதற்காகவோ, தங்க நகைகளைக் கொண்டு வருபவர்கள் குறித்து விபரங்களை முறையாக பதிவு ªச்ய வேண்டும். அத்துடன் அவர்களை போட்டோ எடுத்து வைத்துக்ககொ£ள்ள வேண்டும். இது குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், திருடிய நகைகளை விற்பனை செய்தால் அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். இதுபோல் செய்யத் தவறினால் குற்றம் செய்தவர் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதோ அதே நடவடிக்கை நகைக்கடை உரிமையாளர் மீதும் மேற்கொள்ளப்படும்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் விவசாய தோட்டத்தில் உள்ள வீடுகளில் வசிப்போர் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 3,500 வீடுகள் விவசாய தோட்டங்களில் உள்ளன. அப்பகுதிகளில் ரோந்து போலீசார் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
நகரப் பகுதியில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. கிராமப்புறங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நாமக்கல் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 40 பவுன் வரை நகைகள் பறிமுதல் செய்யபப்ட்டன. இதுபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu