தொழில் நிறுவனங்களில் தினசரி திருக்குறளை பொருளுடன் எழுதி காட்சிப்படுத்த உத்திரவு

தொழில் நிறுவனங்களில் தினசரி திருக்குறளை பொருளுடன் எழுதி காட்சிப்படுத்த உத்திரவு
X

பைல் படம் 

கடைகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் முன்பு, தினம் ஒரு திருக்குறளை எழுதி காட்சிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பைல் படம்

நாமக்கல்,

கடைகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் முன்பு, தினம் ஒரு திருக்குறளை எழுதி காட்சிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் திருவள்ளுவரின் திருக்குறளை தினம் ஒரு குறள் என்ற அடிப்படையில் பொருள் விளக்கத்துடன், நாள்தோறும் எழுதி தொழிலாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்யும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் வகையில் இனி வரும் காலங்களில் தொழில் நல்லுறவு பரிசுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும்போது சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story