பேரன் மீது பாட்டி மயங்கி விழுந்ததால் இருவரும் உயிரிழிப்பு: நாமக்கல்லில் பரிதாபம்

பேரன் மீது பாட்டி மயங்கி விழுந்ததால்    இருவரும் உயிரிழிப்பு: நாமக்கல்லில் பரிதாபம்
X

பைல் படம் 

நாமக்கல் நகரில் இரண்டரை வயது பேரக் குழந்தை மீது பாட்டி மயங்கி விழுந்ததால், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் அருகில் உள்ள, வீசாணம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (32). இவர், சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவரும், சென்னையில் தங்கி ஜெர்மன் மொழியை கற்று வருகிறார். தம்பதியருக்கு, சாய்கிரிஷ், என்ற இரண்டரை வயது மகன் உள்ளார். இக்குழந்தை, நாமக்கல் இ.பி.காலனியில் உள்ள பாட்டி சாந்தி (49) வீட்டில் இருந்து வந்தது.

இதற்கிடையே, சென்னையில் இருந்து அருண்குமார்- காயத்ரி தம்பதியினர் காரில் புறப்பட்டு நாமக்கல் வந்தனர்.

நாமக்கல் வந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அருண்குமார், மாமியார் சாந்தியின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு கீழே விரித்த படுக்கையில் குழந்தை சாய்கிரிஷ் படுத்து இருந்தான். அவன் மீது பாட்டி சாந்தி குப்புற கிடந்தார். இருவரும் மூச்சு பேச்சின்றி மயங்கிய நிலையில் கிடத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக, அவர்களை இருவரையும் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனித்தனி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, செல்லும் வழியில், சிறுவன் சாய்கிரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல், பாட்டி சாந்தியும், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து, நாமக்கல் போலீசில் அருண்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுவிசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்து போன சாந்தி சமீபத்தில் கர்ப்பப்பை ஆபரேஷன் சிகிச்சை செய்திருப்பதும், இதனால் அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுவதும் தெரியவந்தது. மேலும், நேற்று குளித்துவிட்டு வந்தபோது, மயக்கம் அடைந்த சாந்தி, குழந்தை சாய்கிரிஷ் தவறி மீது விழுந்திருக்கலாம் என்பதும், அதில் இருவரும் மூச்சுத்தினறி இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்த போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். பாட்டி தவறி விழுந்து, பேரனும் பாட்டியும் ஒரே நேரத்தில் இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story