முன் பருவ கல்வி முடித்து முதல் வகுப்பு செல்லும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

முன் பருவ கல்வி முடித்து முதல் வகுப்பு செல்லும்    அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா
X

நாமக்கல் கடைவீதி அங்கன்வாடி மையத்தில், முன்பருவ கல்வி முடித்து, முதல் வகுப்பு செல்லும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல்லில் அரசு அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல்,

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, நாமக்கல் தேர்நிலை அருகில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழாந நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொ) சசிகலா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஒன்றிய திட்ட அலுவலர் வித்யாலட்சுமி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் சந்திரவதனி, புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கல்வி அலுவலர் பச்சமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குழந்தைகளுக்கு பட்டச்சான்று வழங்கினார். முன் பருவ கல்வி (நர்சரி) முடித்து, முதல் வகுப்பு செல்லும், 117 மாணவ, மாணவியருக்கு பட்டச்சான்றுகள் வழங்கப்பட்டது. மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Next Story