2026ம் ஆண்டு இபிஎஸ் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்படும்: பாஜ மாநில துணைத்தலைவர் பேச்சு

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் பேசினார். அருகில் மாவட்ட தலைவர் சரணவன்.
நாமக்கல்,
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில், இந்திய முழுவதும் பாஜ சார்பில் மூவர்ண கொடி யாத்திரை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல்லில் வருகிற 23ம் தேதி மூவர்ணக்கொடி யாத்திரை நடைபெறுகிறது. மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இந்த யாத்திரையில் கலந்துகொள்ள உள்ளனர். மூவர்ண கொடி யாத்திரை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்ட்டம், நாமக்கல் மாவட்ட பாஜ அலுவலகத்தில நடைபெற்றது. மாவட்ட பாஜ தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில பாஜ துணைத்தலைவர் டாக்டர் கே.பி. ராமலிங்கம் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய ராணுவ்த்தின் சிந்தூர் ஆப்ரேஷன் மூலம் மிகப் பெரிய சாதனையை நமது பாரத நாடு செய்துள்ளது. வரலாற்று பெருமையை, வலிமையான இந்திய ராணுவம் பறை சாற்றியுள்ளது. சர்வதேச அளவில், பாரத நாட்டை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சேர்த்த இந்த நடவடிக்கை குறித்து இந்திய முழுவதும் போர் வெற்றி யாத்திரை நடத்தி வருகிறோம். அதிமுக பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் நாட்டிற்காக இந்த யாத்திரையில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.
2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்த வரை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி அமையும். பாஜக கூட்டணி தற்போது வலுவாக உள்ளது. திமுக மண்டல வாரியாக தேர்தல் பணியை துவக்கியுள்ளனர். தற்போதே பணம் பட்டு வாடா செய்யும் பணியில் திமுக ஈடுபட்டு வருகிறது. மாவட்ட செயலாளர்கள் மூலமாக ஆங்காங்கு பணம் பதுக்கி வைக்கப்படுகிறது. அதற்கு காவல் துறை உதவி செய்கிறது. டிஜிபி முதல் எஸ்.பி வரை திமுக விற்கு பணம் பட்டுவாடா செய்ய உதவி செய்கின்றனர். இலை எப்போதுமே கீழேதான் இருக்கும். பூ தான் மேலே இருக்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் தான் தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி. அவர்தான் முதல்வர் வேட்பாளர். ஒரு சிலர் எதையாவது கிளறிவிட்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட நினைக்கிறார்கள் அது நடக்காது. ஊழல் ஆட்சி நடத்தி வரும் திமுகவை, ஆட்சியை விட்டு அகற்றுவதுதான் எங்கள் கூட்டணியின் ஒரே குறிக்கோள் என அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu