நாமக்கல்லில் வரும் 23ம் தேதி இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை இலவச பயிற்சி

பைல் படம்
நாமக்கல்,
இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் (கேவிகே) தலைவர் டாக்டர் வேல்முருகன் கூறியுள்ளதவாது;
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 23ம் தேதி காலை 10 மணிக்கு, இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சியில், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம். திட மற்றும் திரவ நொதித்த இயற்கை எரு பயன்படுத்துதல். அங்கக இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள், பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம், மீன் அமிலம், பண்ணைக் கழிவுகளான ஆடு, மாடு தொழுவத்தின் கழிவுகள், களைகள், கோழிஎரு, தென்னை நார்கழிவு, பார்தீனிய களைச்செடிகள் ஆகிய எளிதில் மட்கக்கூடிய கழிவுகளை மறுசுழற்சி செய்ய, நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்கள் பயன்படுத்துதல், இயற்கை முறை களை கட்டுப்பாடு குறித்து விளக்கமும், செயல் விளக்கமும் அளிக்கப்படும்.
இதில், விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முதலில் வரும், 40 விவசாயிகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 -266345, 97877 88005 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமோ 22ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu