என்.சி.சி மாணவர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு
என்.சி.சி மாணவர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு குமாரபாளையத்தில் நேற்று நடந்தது.
என்.சி.சி மாணவர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு குமாரபாளையத்தில் நேற்று நடந்தது.
ஈரோடு 15 வது தமிழ்நாடு பட்டாலியனின் கமெண்ட் ஆபிஸர் கர்னல் ஜெய்தீப் மற்றும் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் அஜய் குட்டினோ ஆகியோரின் ஆணையின்படி, சுபேதார் மேஜர் சுரேஷ் அவர்களின் ஆலோசனையின் படி, பல்வேறு பள்ளிகளை சேர்ந்த என்.சி.சி மாணவர்களுக்கு காலை எழுத்து தேர்வும் மாலை செய்முறை தேர்வும் நடந்தது.
இத்தேர்வானது பள்ளியளவில் இரண்டு ஆண்டுகள் என்.சி.சி யில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் நடத்தப்படும்..
இவற்றில் குமாரபாளையம் எஸ் எஸ் எம் லட்சுமி அம்மாள் பள்ளியில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜே கே கே. ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.எம். லட்சுமி அம்மாள் மேல்நிலைப்பள்ளி, சித்தோடு அரசு மேல்நிலைப்பள்ளி, பர்கூர் மலைவாழ் உண்டு உறைவிடம் ஆகிய பள்ளிகளை சேர்ந்த 157 மாணவர்களுக்கு என்.சி.சி. தேர்வு நடந்தது. இவற்றில் 350 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வும் ,150 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வும் மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.
இந்த செய்முறை தேர்வுகளில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், துப்பாக்கிகளை பிரித்துப் பூட்டுதல், தூரத்தை கணக்கிடுதல், வீரநடை பயிற்சி, வரைபட பயிற்சி மற்றும் வரைபட அளவீடுகள் போன்ற பல்வேறு நிலைகளில் தேர்வுகள் நடந்தது. ஈரோடு 15 ஆவது பட்டாலியனின் சுபேதார் அன்பழகன் மற்றும் ஹவில்தார் செல்லதுரை ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு “ஏ” கிரேடு சான்றிதழ் வழங்கப்படும்..
இச்சான்றிதழானது ராணுவம், காவல்துறை, ரயில்வே துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளிலும் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற கல்லூரி படிப்புகளுக்கும் இரண்டு சதவீதம் சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை என்.சி.சி அலுவலர்கள் அந்தோணிசாமி, சிவக்குமார், ராஜேஷ்குமார், முருகேசன் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu