ஈரோட்டில் தேர்தல் கட்டுப்பாடுகளால் ஜவுளி வார சந்தையில் வியாபாரம் மந்தம்
ஈரோடு : ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வார சந்தை நடைபெற்று வருகிறது. தவிர, ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.
ஜவுளி வியாபாரிகளின் வருகை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திர மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள். இந்த நிலையில், இந்த வார ஜவுளிச் சந்தை நேற்று இரவு தொடங்கியது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு & பொங்கல் கொண்டாட்டங்கள்
கடந்த 5 வாரங்களாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் பொங்கல் விழாக்களை முன்னிட்டு ஜவுளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த வாரம் பொங்கல் பண்டிகை முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வாரம் ஜவுளி விற்பனை மிகவும் மந்தமாகவே காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu