பள்ளிபாளையம்; நாய்கள் கடித்து ஏழு ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு
நாய்கள் கடித்து ஏழு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. அவற்றின் உடல்கள் காவிரிக்கரையோரம் புதைக்கப்பட்டது.
பள்ளிபாளையம் காவிரி கரையோரம் பகுதியில் நாய்கள் கடித்து ஏழு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
பள்ளிபாளையம் அடுத்துள்ள, ஆவத்திப்பாளையம் சமய சங்கிலி அக்ரஹார பகுதியை சேர்ந்த விவசாயிகள்,தங்கள் நிலப்பகுதியில் விவசாயப் பணிகள் நடந்து வருவதால் , தங்கள் ஆடுகளை காவிரி ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சுமார் மூன்று மூன்று விவசாயிகள் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஆடுகளை காவிரி ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர். வழக்கம்போல மாலை வீடு திரும்பிவிடும் ஆடுகள் வீடு திரும்பாததால் ஆட்டின் உரிமையாளர்களான கிருஷ்ணவேணி, சரவணன் உள்ளிட்டோர் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்த பொழுது ,சுமார் 7 ஆடுகள் பலத்த காயங்களுடன் பரிதாபமாக இறந்து கிடந்தது தெரியவந்தது.
மேலும் மேய்ச்சலுக்குப் போன நான்கு ஆடுகள் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் காவிரி ஆற்றங்கரையோரம் சுற்றித் திரியும் வெறி நாய்கள் ஆடுகளை கடித்து கொன்று இருக்கலாம் என அப்பகுதி சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர்கள் ஆடுகளை உடல் பரிசோதனை செய்தனர் . காவிரி கரையோரம் ஏழு ஆடுகளும் புதைக்கப்பட்டது.
வெறி நாய்கள் கடித்து ஆடுகள் இறந்த சம்பவம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
கடந்து சில மாதங்களுக்கு முன்பாக ஆனங்கூர் ஊராட்சி ஒன்றியம் பகத்சிங் நகர் என்ற பகுதியில், வெறிநாய்கள் கடித்து பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu