பானை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
குமாரபாளையத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பொங்கல் பொருட்கள் வாங்கினர்.
குமாரபாளையத்தில் பானை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
நாளை பொங்கல் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பொங்கல் வைக்க தேவையான பானை, பூஜைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொம்பு உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்க தினசரி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். போகி பண்டிகையையொட்டி தங்கள் வீடுகளில், தொழில் நிறுவனங்களில் உள்ள பழைய பொருட்களை அகற்றி, தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வாசலில் வண்ண கோலமிட்டனர்.
பெரும்பாலான விசைத்தறி பட்டறைகளில் பொங்கல் சமயத்தில் போனஸ் தருவது வழக்கம். போனஸ் வழங்கப்பட்ட பட்டறை தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். போனஸ் சமயத்தில்தான் தொழிலாளர்கள் பலர் தங்கள் வீடுகளுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், பிள்ளைகளுக்கு தங்கம், குடும்பத்தினருக்கு புத்தாடைகள் வாங்குவது வழக்கம். இதனால் நகைக்கடைகள், ஜவுளி விற்பனை கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சேலம் சாலையில் கட்டில் ஜவுளிக்கடைகள், டிபன் கடைகள் என பலதரப்பட்ட சாலையோர கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
குமாரபாளையம் காளியம்மன் கோவில், அனைத்து மாரியம்மன் கோவில்கள், பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், மங்களாம்பிகை கோவில், காசி விஸ்வேஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் பொங்கல் பண்டியையொட்டி சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu