சி.பி.எம். சார்பில் 9வது மாவட்ட மாநாடு துவக்கம்
படவிளக்கம் : குமாரபாளையத்தில் சி.பி.எம். சார்பில் 9வது மாவட்ட மாநாடு துவக்கப்பட்டதையொட்டி , செம்படை பேரணி நடந்தது.
சி.பி.எம். சார்பில் 9வது மாவட்ட மாநாடு துவக்கம்
விசைத்தறி, பஞ்சாலை. கார்மெண்ட்ஸ், கோன் வைண்டிங் உள்ளிட்ட சிறுகுறு தொழிலை பாதுகாத்திட வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20% சதம் கூலி உயர்வை அமல்படுத்தி பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் சம்பளம் ரூ 544 உத்தரவாதப்படுத்திட வேண்டும், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் இரவு காவலர்கள், தூய்மை பணியாளர், மருத்துவர், செவிலியர், ஸ்கேன் வசதி மருந்து மாத்திரை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்,நாமக்கல் மாவட்ட 9-வது மாநாடு குமாரபாளையம் லட்சுமி மஹால் மண்டபத்தில் துவங்கியது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து செஞ்சட்டை அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை வரவேற்பு குழு தலைவர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். இந்த ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மாநாட்டு திடலில் நிறைவடைந்தது. கொடி மற்றும் தியாகிகள் ஜோதியை மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, முத்து, கண்ணன்,
மாநில குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட குழு செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு பெருமாள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மாநாட்டு கொடியினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன் வாசித்தார். வரவேற்பு குழு செயலாளர் சக்திவேல் வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி பேசினார்.
மாவட்ட குழு செயலாளர் கந்தசாமி வேலை அறிக்கை சமர்ப்பித்து பேசினார். முதல் நாள் நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, தங்கமணி, தமிழ்மணி, ஜெயமணி சுரேஷ், கண்ணன், கணேச பாண்டியன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu