உங்களுக்கு ரத்தசோகையா....? சூப்பர் இந்த உணவுகள் போதுமே...6 மாசத்துல அட்டகாச மாற்றம் கிடைக்கும்...! | Iron-rich foods for anemia in tamil
உங்க உடம்பு சோந்து போகுதா.., கால் , கை வலி ரொம்ப அதிகமாக இருக்கா..? டாக்டர் கிட்ட போனால் இரத்த சோகை(Anemia) சொல்லி மாத்திரை பெருசு பெருசா தருவாங்கனு பயம் வேண்டாங்க. ரத்தம் இல்லைனு ஹாஸ்பிடல் போகாம ரத்தம் ஏறமாறி இருக்க உணவுபொருள் வாங்கி சாப்பிடுங்க.ரத்த சோகை(Anemia)அப்டினு ரொம்ப கவலை வேண்டாம் . எதுக்கு கவலை இனிமே நான் சொல்றத டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க. அப்புறம் கால் வலி , கை வலி ஒன்னு வராது உடம்பு ஆரோக்கியம் , ஆற்றலா இருப்பீங்க.அப்போ டிப்ஸ் ஃபாலோ பண்ண ரெடியா..? வாங்க என்னனு பார்க்கலாம்.
ரத்தசோகை | Anemia meaning in tamil
ரத்த சோகை(Anemia) என்பது ரத்தத்தில் சிகப்பு ரத்த அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை தசைகளுக்கு சுமந்து செல்கிறது. ஒருவேளை ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ, ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ தசைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் திறன் ரத்தத்துக்குக் குறையும். இதனால் உடற்சோர்வு, வலிமையின்மை, மயக்க உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை உண்டாகும்.
உலகம் முழுவதுமே ஆண்களை விடவும் பெண்களுக்கே ஒப்பீட்டளவில் அதிகமாக ரத்த சோகை உள்ளது. குறிப்பாக குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களுக்கு ரத்த சோகை குறைபாடு அதிகம் என்கிறது ஆய்வு. மாதவிடாய், மகப்பேறு போன்றவை காரணமாக பெண்களுக்கு ரத்தம் வெளியேறும் காரணிகள் இயற்கையாகவே இருப்பதால் பெண்களிடையே ரத்த சோகை(Anemia) அதிகமாக இருக்கிறது.தினமும் சத்தான உணவு anemia treatment foods in tamil சாப்பிடுங்க எந்த நோயும் வராது.
ரத்தசோகை போக்கும் உணவுகள் | Iron-rich foods for anemia in tamil
1.தானியங்கள் - கம்பு, கேழ்வரகு, அவல், முளைகட்டிய கோதுமை.
2.பருப்பு வகைகள் - வறுத்த கடலை, காராமணி, வறுத்த பட்டாணி, சோயாபீன்ஸ்.
3. கீரைகள் - காலி பிளவர், மணத்தக்காளி, முள்ளங்கிக் கீரை, பசலைக்கீரை.
4.கிழங்கு வகைகள் - கேரட், கருணைக்கிழங்கு.
5. பிற காய்கள் - பீன்ஸ், தாமரைத்தண்டு, வெங்காயத்தாள், வாழைக்காய், சுண்டைக்காய்.
6. கொட்டை உணவுகள் - பாதாம், முந்திரி, கொப்பரைத்தேங்காய், தர்பூசணி விதை.
7. பழங்கள் - நெல்லிக்காய், பேரீட்சை, கொய்யாப்பழம், கொடுக்காப்புளி, தர்பூசணி, அன்னாசி, மாதுளை, உலர் திராட்சை, சீத்தாப்பழம்.
8.இனிப்புகள் - வெல்லம், ஜவ்வரிசி.
9.அசைவ உணவுகள் - முட்டை, ஆட்டு ஈரல், சிறு மீன்கள்.
10. வயிறு நிறைந்திருக்கும்போது இரும்புச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதும் குறைவாகவே உறிஞ்சப்படும் .
11. இரும்புச்சத்து தவிர ஃபோலிக் ஆசிட், ஜின்க், விட்டமின் - பி12 ஆகியவை நிறைந்துள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
12. விட்டமின் சி-சத்து மிக்க உணவுகளை (ஆரஞ்சு, தக்காளி, குடைமிளகாய்) சேர்த்துக் கொள்ள வேண்டும், இது இரும்பு சத்தின் உறிஞ்சுவதை மேம்படுத்தும்.
13. முட்டை, பால், தயிர், மீன் மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
14. இரும்பு சத்து குறைபாட்டை சரிசெய்ய மருத்துவர் பரிந்துரைத்து இரும்பு மாத்திரை சாப்பிடலாம்.
15. அதிகப்படியான காபி, டீ குடிக்காமல் பால் மற்றும் பால் சார்ந்த சத்தான உணவை சாப்பிடலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu