லயன்ஸ் சங்க நிறுவனர் பிறந்தநாளையொட்டி இலவச வேட்டி, சேலை, அன்னதானம்
லயன்ஸ் கிளப்பை தோற்றுவித்த மெல்வின் ஜோன்ஸ் பிறந்தநாளையொட்டி,குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் அன்னை அதரவற்றோர் மையத்தில் உள்ள முதியவர்களுக்கு வேட்டி, சர்ட், சேலைகளை பட்டய தலைவர் ஜெகதீஷ், சமூகநல விரிவாக்க அலுவலர் ஜெயலலிதா உள்பட பலர் வழங்கினர்.
லயன்ஸ் சங்க நிறுவனர் பிறந்தநாளையொட்டி இலவச வேட்டி, சேலை, அன்னதானம் வழங்கப்பட்டது.
லயன்ஸ் கிளப் தோற்றுவித்த மெல்வின் ஜோன்ஸ் பிறந்தநாளையொட்டி,குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் அதரவற்றோர் மையத்தில் உள்ள முதியவர்களுக்கு வேட்டி, சர்ட், சேலைகள் தலா இரண்டு செட் வழங்கியதுடன் அன்னதானம் மற்றும் ஏழை மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
லயன்ஸ் கிளப் தோற்றுவித்த மெல்வின் ஜோன்ஸ் பிறந்தநாள் விழா ,குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் அன்னை ஆதரவற்றோர் மையத்தில் உள்ள முதியவர்களுக்கு வேட்டி, சர்ட், சேலைகள் தலா இரண்டு செட் வழங்கியதுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயலலிதா பங்கேற்று முதியவர்களுக்கு வேட்டி, சர்ட், சேலைகள் வழங்கி அன்னதானம் வழங்கினார்.
நித்யபிரபா என்ற மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மாவட்ட பசிப்பிணி தலைவர் சண்முகசுந்தரம், சங்கத் தலைவர் மாதேஸ்வரன், சங்க செயலாளர் கதிர்வேல், பொருளாளர் செல்லவேல் முன்னாள் பொருளாளர் தர்மலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu