ஓமந்தூரார் பிறந்த நாள் விழா கோலாகலம்

ஓமந்தூரார் பிறந்த நாள் விழா கோலாகலம்
X
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் ஓமந்தூரார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஓமந்தூரார் பிறந்த நாள் விழா கோலாகலம்

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் ஓமந்தூரார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நேர்மை,சத்தியம்,ஒழுக்கம், எனும் கொள்கை பிடிப்போடு வாழ்ந்த, முதல் தமிழக முதல்வர், சுதந்திர போராட்ட தியாகி, முதல் சுதந்திர தேசிய கொடியை ஏற்றிய பெருமை பெற்ற, ஓமந்தூரார் பிறந்த நாள் விழா, விடியல் ஆரம்பம் சார்பில், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.. ஓமந்தூராரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக புத்தகம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பேராசிரியை விஜயலட்சுமி மற்றும் திருக்குறள் பங்கஜம் ஆகியோர் ஓமந்தூரார் இராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மாணவ மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதில் சவுந்தர், கலையரசி உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் ஓமந்தூரார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!