குமாரபாளையம் JKKN கல்வி நிறுவனங்களில் "நிறுவனர் தினவிழா"

குமாரபாளையம் JKKN கல்வி நிறுவனங்களில் நிறுவனர் தினவிழா
X

நிறுவனர் தின விழாவுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவி ஒருவருக்கு பரிசு வழங்கும் ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை.

குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா அவர்களின் பிறந்தநாள் JKKN கல்வி நிறுவனங்களின் சார்பில் நிறுவனர் தினமாக கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தின் கொடைவள்ளல் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ஜே.கே.கே.நடராஜா அவர்கள். அவர் உருவாக்கிய கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் இன்றளவும் குமாரபாளையம் பகுதி மக்களுக்கு பயனளித்து வருகிறது.

நிறுவனர் தின விழாவுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் இவரது பிறந்தநாளை நிறுவனர் நாளாக JKKN கல்வி நிறுவனங்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வாண்டு நிறுவனர் நாள் விழா குமாரபாளையம் JKKN கல்வி நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது.

மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ஓம் சரவணா.

இந்த விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக இயக்குனர் ஐஸ்வர்யா ஒம்சரவணா கலந்து கொண்டார்.

மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ஓம் சரவணா.

இவ்விழாவினை யொட்டி இணையம் வாயிலாக நடைபெற்ற கலாச்சார மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தாளாளர் செந்தாமரை பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். அதேபோல நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா மற்றும் ஐஸ்வர்யா ஓம் சரவணா ஆகியோரும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

விழா மேடையில் அமர்ந்திருக்கும் விருந்தினர்கள்.

முன்னதாக விழாவில், பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர். சிவக்குமார் விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்றார். விழாவின் நிறைவில், பார்மசி கல்லூரி முதல்வர் முனைவர் சம்பத்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story