சி.பி.எம். மூத்த நிர்வாகியின் நூற்றாண்டு விழா
குமாரபாளையம் சி.பி.எம். சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமியின் நூற்றாண்டு விழா கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் சி.பி.எம். சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.பி.எம் நிர்வாகியின் நூற்றாண்டு விழா நடந்தது.
குமாரபாளையம் சி.பி.எம். சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியின் நூற்றாண்டு விழா நகர குழு செயலர் சக்திவேல் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட குழு செயலர் கந்தசாமி பேசியதாவது:
முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த போது தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். அரசு பள்ளிகளுக்கு எண்ணற்ற பணிகளை செய்து கொடுத்துள்ளார். வீடு இல்லாத ஏழை, எளியவர்களுக்கு வீடுகள் கிடைக்க உதவி செய்தார். தொழிலாளர் பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்து வைத்து, தொழிலாளிகளுக்கும், முதலாளிகளுக்கும் சுமுக உறவை ஏற்படுத்தினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், நகர குழு உறுப்பினர்கள் சண்முகம், கந்தசாமி, காளியப்பன், மாதேஸ், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட விசைத்தறி சங்க மகாசபைக் கூட்டம்
குமாரபாளையத்தில் மாவட்ட விசைத்தறி சங்க மகாசபைக் கூட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் மாவட்ட விசைத்தறி சங்க மகாசபைக் கூட்டம் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக சம்மேளன பொது செயலர் சந்திரன் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து வாழ்த்தி பேசினார். குமாரபாளையம், பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஆண் மற்றும் பெண்களுக்கு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தத்தை முழுமையாக அமலுக்கு கொண்டுவர வேண்டும்.
தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பேசிட வேண்டும், இருபது சதவீதம் போனஸ் வழங்க வேண்டும், நலவாரிய பதிவில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, 60 வயதினருக்கு மூவாயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், வீடு இல்லா தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்,
சேசாயி காகித ஆலை, பொன்னி சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அகற்றி, சுற்று சூழல் பாதுகாக்க வேண்டும், வேலையின்மை, விலை உயர்வால் ஏற்பட்ட தொழில் நெருக்கடியால், மைக்ரோ பைனான்ஸ் கடன், தனியார் கந்துவட்டி கடன், நுண் கடன்களை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், சந்து கடைகளை அகற்ற வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் முன்னாள் தலைவர் ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர் மோகன், சங்க செயலர் அசோகன், பொருளர் முத்துக்குமார், வேலுசாமி, உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu