ஈரோடு கிழக்கு தொகுதியில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில் 47 வேட்பாளர்கள் போட்டியில் உள்ள நிலையில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனுக்களை தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். கடந்த 18 -ஆம் தேதி நடைபெற்ற பரிசீலனையில் 3 வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடியாயின.
8 வேட்பாளர்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர்
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இறுதி நாளான திங்கள்கிழமை மேலும் 8 போர் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷின் விளக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் என்.மணீஷ் செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசியதாவது:
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
- மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதில், 7 போர் சுயேச்சை, ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரின் மாற்றாகும்.
- இறுதியாக 47 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
நோட்டாவுடன் 48 இடங்களைக் கொண்ட வாக்குச்சீட்டு
நோட்டாவுடன் சேர்த்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும் வாக்குச் சீட்டில் 48 இடங்கள் பிடிக்கும்படி அச்சடிக்கப்படும்.
வேட்பாளர்களின் பெயர், சின்னங்களை அச்சடிக்க சென்னைக்கு அனுப்பப்படும்
வேட்பாளர்களின் சின்னத்தை இறுதி செய்ததும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்னைக்கு சென்று, இறுதி வேட்பாளர் விவரம், சின்னங்கள் விவரத்தை தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்து, வாக்குச்சீட்டு அச்சடிப்பதற்கான பணிகளைத் தொடங்குவர்.
ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள்
ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் இடம்பெறும். 16 -ஆவது இடத்தில் நோட்டாவை பொருத்துவர்.
47 வேட்பாளர்கள் + நோட்டா = 48 இடங்கள்
தற்போது 47 வேட்பாளர்கள் உள்ளதால் நோட்டாவுடன் சேர்த்து 48 இடங்கள் தேவை. இதனால், 3 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், 1 வி.வி.பேட் ஆகியவை ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒதுக்கப்படும்.
முதல் 47 இடங்களில் வேட்பாளர்கள், 48-வது இடத்தில் நோட்டா
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், முதல் 47 இடங்களில் வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் சின்னங்கள் இடம்பெறும். 48 -ஆவது இடத்தில் நோட்டா இடம்பெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu