குமாரபாளையம்; பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவக்கம்; மாற்று கடைகள் அமைக்கும் பணி தீவிரம்

குமாரபாளையம்; பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவக்கம்; மாற்று கடைகள் அமைக்கும் பணி தீவிரம்
X

குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவங்கியதால், பஸ் ஸ்டாண்ட் கடையினருக்கு தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவங்கியதால், பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு மாற்று கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவங்கியதால், பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு மாற்று கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டிடங்கள் சேதமானதால், அவற்றை அகற்றி, புதிய கட்டிடங்களாக மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சில நாட்களாக மேலே போடப்பட்ட சிமெண்ட் அட்டைகள் அகற்றப்பட்டன. நேற்று பஸ்கள் உள்ளே நுழையும் பகுதி அடைக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பஸ்கள் அனைத்தும் டெம்போ ஸ்டாண்ட் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது. பயணிகள் அந்த இடத்தில் இறங்கியும், ஏறியும் வந்தனர்.

பஸ் ஸ்டாண்ட் கடையினருக்கு தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டெம்போக்கள், டூரிஸ்ட் வேன்கள், டூரிஸ்ட் கார்கள் மாற்று இடத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறி மார்க்கெட் சில நாட்கள் முன்பு, புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையம் கத்தேரி பிரிவில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து கோவை, திருப்பூர், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கும், கல்வி பயிலவும் ஏராளமான பேர் கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதிலிருந்து சென்று வருகின்றனர். அதே போல் சேலம், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பல அரசு அலுவலக பணிகளுக்காகவும், தொழில் சம்பந்தமாகவும் ஏராளமான பேர் தினமும் அதே இடத்திலிருந்து பஸ் ஏறி சென்று வருகின்றனர். தற்போது கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கியதால், பஸ் நிறுத்தம் எங்கு என்று தெரியாமல் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க இந்த பகுதியில் இரு புறமும் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

நீண்ட வருட கோரிக்கையை ஏற்று கத்தேரி பகுதியில் மேம்பாலம் பணிகள் துவங்கியுள்ளது. மகிழ்ச்சி. இது குமாரபாளையம் நகரின் நுழைவுப்பகுதி. எண்ணற்ற விசைத்தறி கூடங்கள், கைத்தறி கூடங்கள் உள்ளன. இதில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் இங்குள்ள 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சாயமிடும் தொழில் செய்து வருகிறார்கள். எண்ணற்ற தொழிலாளர்கள் பல பகுதியில், பல ஊர்களில் இருந்து குமாரபாளையம் நகருக்கு வேலைக்கு வருகிறார்கள். ஆகவே, எண்ணற்ற தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கவும், விசைத்தறி, கைத்தறி தொழில் சிறக்கவும், கத்தேரி பகுதியில், மேம்பாலம் கட்டும் பணி நிறைவு பெறும் வரை, தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!