பா.ஜ.க. சாதனை விளக்க ரத யாத்திரை குமாரபாளையம் வருகை

பா.ஜ.க. சாதனை விளக்க  ரத யாத்திரை குமாரபாளையம் வருகை
X

குமாரபாளையத்தில் பா.ஜ.க. சாதனை விளக்க ரத யாத்திரை வந்தது.

குமாரபாளையத்தில் பா.ஜ.க. சாதனை விளக்க ரத யாத்திரை வந்தது.

குமாரபாளையத்தில் பா.ஜ.க. சாதனை விளக்க ரத யாத்திரை வந்தது.

பா.ஜ.க. சாதனை விளக்க ரத யாத்திரை குமாரபாளையம் நகருக்கு வந்தது. இதில் பா.ஜ.க. அரசின் சாதனைகள் திரைப்படமாகவும் காண்பிக்கப்பட்டது. பழங்குடியின சமூகத்தினருக்கு மரியாதை, உரிமைகள், வாய்ப்புகள், ஏழைகளுக்கு அடிப்படை கட்டமைப்பு உருவாக்கம், மகளிர்க்கு அதிகாரமளித்தல், விவசாயிகள் நலன், உணவு பாதுகாப்பு உத்தரவாதம், ஆயுஷ்மான் பாரத் எனும் மக்கள் ஆரோக்கிய திட்டம், ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக பாதுகாப்பு, வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் சீரமைப்பு, புத்தொழில் இந்தியா, வந்தே பாரத், என்பது போன்ற விளக்கவுரை படமாகவும், வாய்மொழி மூலமாகவும் எடுத்துரைக்கப்பட்டது. பா.ஜ.க. அரசின் சாதனைகள் குறித்து நாட்காட்டி, துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அருகே மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை குஜராத் மாநிலங்களவை பெண் உறுப்பினர் ரமீலா பென் பாரா துவக்கி வைத்தார்.

மத்திய அரசு விஸ்வகர்மா என்ற திட்டத்தின் மூலம் சிறுகுறு தொழில்களை ஊக்குவிக்கவும், குலத் தொழிலை வளர்க்கவும் விஸ்வகர்மா என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் கடன் உதவி மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள சூழ்நிலையில், கிராமப் பகுதிகளிலும் விஸ்வகர்மா திட்டம் பரவ வேண்டும் என்ற நோக்கத்தில், பாரதிய ஜனதா கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ரபிலா பின் போரா கலந்துகொண்டு பயனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றார்.

அவர் பேசியதாவது:

குஜராத் மாநிலத்தின் கடைக்கோடி பகுதியான சாந்தி நகர் பகுதியில் இருந்து தான் வந்துள்ளேன். விஸ்வகர்மா திட்டம் சிறந்த திட்டம். இது சாதாரண மக்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யும். சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில், ஏழைகளே இல்லாத இந்தியா உருவாக்குவதுதான் பிரதமர் லட்சியம். குடிநீர் குழாய் அமைத்தல், வீடு தோறும் கழிப்பிடம் அமைத்தல், வீடு கட்டி தருதல் உள்ளிட்ட எண்ணற்ற மக்களின் அத்தியாவசிய திட்டங்களில் இந்த விஸ்வகர்மா திட்டமும் ஒன்று. தமிழகத்தில் 86 லட்சம் மனுக்கள் இது வரை பெறப்பட்டுள்ளது. இதில் 32 லட்சம் மனுக்கள் மாவட்ட நிர்வாக மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!