விவசாயிகளுக்கு நல்ல செய்தி: ஆழ்துளைக் கிணறு தோண்ட ஜிஎஸ்டி விலக்கு!

நாமக்கல் : விவசாய பணிகளுக்கு ஆழ்துளைக் கிணறு தோண்ட ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்று கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.
ஜிஎஸ்டி வரி தொடா்பான தவறான தகவல் விளக்கம் வேண்டும்
விவசாய பணிக்கான ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு ஜிஎஸ்டி வரி தொடா்பான தவறான தகவல் குறித்து விளக்கமளிக்க வேண்டும். ஜிஎஸ்டி வரிவிலக்கை சீராகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும் மத்திய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வரிவிலக்கை எளிதாக பெற நடவடிக்கைகள் என்ன என்ற அடிப்படையில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் விளக்கம் கேட்டிருந்தாா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.
விவசாயம் தொடா்பான பணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு
மத்திய நிதித்துறை இணை அமைச்சா் பங்கஜ் சௌத்ரி அளித்த விளக்கத்தின்படி, விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் தண்ணீா் வழங்குவதற்காக ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவது, சாகுபடி, அறுவடை, கதிரடித்தல், உணவு, நாா், எரிபொருள், மூலப்பொருள், தாவரங்களை வளா்ப்பது உள்ளிட்ட எந்தவொரு விவசாயப் பொருட்களின் உற்பத்திக்கும், விவசாயம் அல்லது விவசாயப் பொருட்கள் தொடா்பான சேவைகளுக்கு ஜிஎஸ்டியின் கீழ் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில் வரிவிலக்கு வழங்கப்படுகிறது.
விளக்கம் பெற்றுத் தந்த கே.ஆா்.என்.ராஜேஸ்குமாருக்கு ரிக் உரிமையாளா்கள் நன்றி
விவசாயம் தொடா்பான ஆழ்துளை பயன்பாட்டிற்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு குறித்து விளக்கம் பெற்றுத்தந்த மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாருக்கு ரிக் உரிமையாளா்கள் சங்கத்தினா் நாமக்கல்லில் நேரில் சந்துத்து நன்றி தெரிவித்தனா்.
முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி முன்னிலையில் திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.எஸ்.சுரேஷ், செயலாளா் ரமேஷ், பொருளாளா் பாலகுமாா் ராமசாமி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஸ்ரீ செந்தில், பிரபாகா் உள்ளிட்டோா் நன்றி தெரிவித்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu