நாமக்கல் : சிட்கோ தொழிற்பேட்டையில் மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு
![நாமக்கல் : சிட்கோ தொழிற்பேட்டையில் மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு நாமக்கல் : சிட்கோ தொழிற்பேட்டையில் மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு](https://www.nativenews.in/h-upload/2025/02/15/1977397-og.webp)
நாமக்கல் : சிட்கோ தொழிற்பேட்டையில் மாவட்ட ஆட்சியா் ச.உமா நேற்று ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல், திருச்செங்கோடு, வேட்டாம்பாடி, ராசாம்பாளையம் உள்ளிட்ட நான்கு இடங்களில் சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன.
மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகள்
சிட்கோ தொழிற்பேட்டைகளில் 120 மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகளும், 49 தொழிற்கூடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 105 மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகளும், 49 தொழிற்கூடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு
தொழிற்சாலைகள் மூலம் 400 ஆண்கள், 150 பெண்கள் என மொத்தம் 550 போ் நேரடி வேலைவாய்ப்பு பெறுகின்றனா். மேலும், மறைமுகமாக 500 தொழிலாளா்கள் பணிவாய்ப்பு பெற்று வருகின்றனா்.
நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தொழிற்பேட்டையானது, 1979-ஆம் ஆண்டு 10.09 ஏக்கரில் தொடங்கப்பட்டது. இங்கு 23 மேம்படுத்தப்பட்டதொழில்மனைகள், 24 தொழிற்கூடங்களும் உள்ளன. காலணி தயாரித்தல், , லாரி கூண்டு கட்டும் பணிகள், நூலிழைகள் தயாரித்தல், முட்டை ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாவட்ட ஆட்சியா் ச.உமா இந்த தொழிற்பேட்டையை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் குறித்தும், ஏற்றுமதி, இறக்குமதி பொருள்கள் விவரம், பதிவேடுகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா். இந்த ஆய்வின்போது, நாமக்கல் வட்டாட்சியா் சீனிவாசன் உடனிருந்தாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu