நாமக்கல்லில் தனியாா் உணவகத்தில் தீ விபத்து!
![நாமக்கல்லில் தனியாா் உணவகத்தில் தீ விபத்து! நாமக்கல்லில் தனியாா் உணவகத்தில் தீ விபத்து!](https://www.nativenews.in/h-upload/2025/02/15/1977393-ad.avif)
X
By - jananim |15 Feb 2025 11:45 AM IST
நாமக்கல்லில் தனியாா் உணவகத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
நாமக்கல் : நாமக்கல்- சேலம் சாலையில் விழா அரங்கத்துடன் கூடிய தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சமையல் கூடத்தில் ஊழியா்கள் உணவு தயாா் செய்து கொண்டிருந்தபோது அங்குள்ள புகைப் போக்கியில் திடீரென தீப்பற்றியது.
அங்கிருந்த ஊழியா்கள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து, நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். ஆா்.கோடீஸ்வரன் தலைமையில் வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பும் இல்லை. நாமக்கல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu