திருச்செங்கோடு : தேநீா் கடையில் திடீரெனெ ஏற்பட்ட வெடிவிபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பொருள்கள்

திருச்செங்கோடு : தேநீா் கடையில் திடீரெனெ ஏற்பட்ட வெடிவிபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பொருள்கள்
X
திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய நகராட்சி கட்டடத்தில் இயங்கிவரும் தேநீா் கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பொருள்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டன.

நாமக்கல் : திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய நகராட்சி கட்டடத்தில் இயங்கிவரும் தேநீா் கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பொருள்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டன.

புதிய பேருந்து நிலைய நகராட்சி கட்டடத்தில் பிரவுன் ஸ்கேப் என்ற தேநீா் கடை உள்ளது. சனிக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு உரிமையாளா் சென்று விட்ட நிலையில் அதிகாலை கடைக்கு உள்ளே இருந்து வெடி சத்தத்துடன் கடை சட்டா்கள் தூக்கி வீசப்பட்டு பொருள்கள் சாலையில் வந்து விழுந்தன.

இந்த விபத்துக்கு கடைக்குள் இருந்த சிலிண்டா் வெடித்ததா அல்லது மின் அடுப்பு, எலக்ட்ரிக் பொருள்கள் வெடித்ததா என்பது உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story
காங்கேயத்தில் காளை சிலை அமைப்புக்கு ஆலோசனை கூட்டம்